தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
==புதிய வளாகம்==
[[படிமம்:Tamil Nadu Secretariat.jpg|300px|right]]
2007 இல் [[திமுக]] ஆட்சி காலத்தில் அண்ணா சாலை ஓமந்தூரார் அரசு அலுவலக வளாகத்தில் புதிய சட்டமன்ற வளாகம் அமைக்கப் படுமென முதல்வர் [[மு. கருணாநிதி]] அறிவித்தார். வளாக வடிவமைப்பிற்கான போட்டியில் [[ஜெர்மனி|ஜெர்மனியின்]] ஜிஎம்பி இன்டெர்நேஷனல் நிறுவனத்தின் வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப் பட்டது. 2008 இல் கட்டுமானப் பணிகள் தொடங்கின. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஈசிசிஐ (ECCI) நிறுவனத்திடம் கட்டுமானப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்நிறுவனம் இதற்கு முன் [[வள்ளுவர் கோட்டம்]] போன்ற அரசு கட்டிடங்களைக் கட்டியுள்ளது. வளாகத்தின் கட்டுமானம் இரு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. புதிய கட்டிடத்தை எதிர்த்து [[அதிமுக]] உறுப்பினர்கள் சிலர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால் அம்மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டன.<ref>[http://www.deccanchronicle.com/chennai/ex-mla-files-case-against-secretariat-849 Ex-MLA files case against secretariat]</ref><ref>{{cite news | url=http://www.timesofindia.com| title=HC not to stay construction of new assembly building| publisher=Timesofindia| date=25 Feb 2010|page=4| accessdate=25 Feb 2010}}</ref>
 
எண்பதாயிரம் சதுர அடி அலுவலகப் பரப்புள்ள (office space) புதிய வளாகம் 425 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இவ்வளாகத்தில் 2000 இருக்கை வசதி கொண்ட அரங்கமும், 500 உந்துகள் நிறுத்துவதற்கான வசதியும் உள்ளது. வளாகத்தின் மையப் பகுதியில் [[திராவிடக் கட்டிடக்கலை]] அம்சங்களுடன் கூடிய 100 அடி உயரமும் 120 அடி குறுக்களவும் கொண்ட கோபுரம் ஒன்று உள்ளது. இவ்வளாகத்தில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் [[பசுமைக் கட்டிடம்|பசுமைக் கட்டிடங்களாக]] வடிவமைக்கப் பட்டுள்ளன. வளாகத்தின் முதல் கட்டம் 2010 ஆம் ஆண்டு முடிக்கப் பட்டது. மார்ச் 13 2010 இல் இந்தியப் பிரதமர் [[மன்மோகன் சிங்]] அதனைத் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசு]] தலைவர் [[சோனியா காந்தி]], [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர]], [[கர்நாடகம்|கர்நாடக]] மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். மார்ச் 16 முதல் தமிழ் நாடு சட்டமன்றம் புதிய வளாகத்தில் கூடத்தொடங்கியது. வளாகத்தின் இரண்டாவது கட்டம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2011 இல் கட்டுமானப் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்தவுடன் புதிய வளாகத்தில் உள்ள பொது அங்காடியை (Public Plaza), பொது மக்களின் பார்வைக்கு திறந்து விடும் திட்டம் உள்ளது.<ref>[http://beta.thehindu.com/news/national/article244275.ece Tamil Nadu’s Legislature gets a grand, green home]</ref>