விக்கிப்பீடியா:கைப்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{policy|WP:SOCK}} *விக்கிப்பீடியாவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:01, 23 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.
குறுக்கு வழி:
WP:SOCK


  • விக்கிப்பீடியாவில் ஒரு பயனர் ஒரு கணக்கை மட்டுமே பயன்படுத்தி பங்களிக்க வேண்டும்.
  • இவ்விதிக்கு கீழ்காணும் விதிவிலக்குகள் உண்டு:
  1. தானியங்கி ஓட்டத்துக்காக தனிக்கணக்கு தொடங்கலாம்
  2. குறிப்பிட்ட ஒரு திட்டத்தில் மட்டும் பங்கு பெற தனி கணக்கு தேவையெனில் தொடங்கிப் பயன்படுத்தலாம்
  3. பாதுகாப்பு குறைந்த வெளிச்சூழல்களிலும் பொதுக் கணினிகளில் இருந்தும் பங்களிக்க தனிக்கணக்கு தொடங்கலாம்.
  4. பழைய கணக்கின் கடவுச்சொல் தொலைந்து போய், மீட்டெடுக்க முடியவில்லையெனில் புதுக்கணக்கு தொடங்கலாம்.
  • ஆனால் மெற்சொன்ன விதிவிலக்குகளில் பழைய/முதன்மை கணக்கு என்ன என்பதைத் தெளிவாக பயனர் பக்கத்திலோ வெளிப்படையாகவோ குறிப்பிட வேண்டும்.
  • பங்களிப்பாளர் யார் என்பதை மறைக்க புகுபதிகை செய்யாமல் ஐபி முகவரியாகத் தொகுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
  • ஒரு கருத்தினை பலர் ஆதரிக்கின்றனர் என்ற பிம்பத்தை உருவாக்க வேறு கணக்குகளை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும்
  • எக்காரணத்தினாலோ கணக்கு தடை செய்யப்பட்டால், தடையை மீறுவதற்கு இன்னொரு கணக்கை உருவாக்கக் கூடாது. தடையை விலக்க விண்ணப்பித்தோ அல்லது தடை நீங்கும் வரை காத்திருந்த பின்னரோ மீண்டும் பங்களிக்கலாம்.
  • மேற்குறிப்பிட்ட்ட விதிகளை மீறி ஒருவர் உருவாக்கும் பிற கணக்குகள் “கைப்பாவைகள்” (Sockpuppets) எனப்படும். உருவாக்குபவர் “ஆட்டுவிப்பவர்” (Sockmaster) என அழைக்கப்படுவார்.
  • செயல்பாடுகள் மூலமாகவோ, பயனர் சோதனை (checkuser) மூலமாகவோ ஒருவர் பல கணக்குகளை பயன்படுத்துகிறார் என்பதைக் கண்டறிந்தால், கைப்ப்பாவைக் கணக்குகளை முடிவிலியாகத் தடைசெய்யப்படும்; ஆட்டுவிப்பவர் முதலில் ஒரு வார காலத்துக்கு தடை செய்யப்படுவார். தொடர்ந்து கைப்பாவைகளை உருவாக்கினால் அவர்து தடை முடிவிலியாக்கப்படும்.
  • கைப்பாவைகளை உருவாக்கி விசமத்தனம் செய்ததற்காக தடை செய்யப்பட்ட ஒருவர் விக்கி சமூகத்துக்கு விண்ணப்பித்து, அவர் மீண்டும் விசமச் செயல்களை செய்ய மாட்டார் என்று சமூகத்தினிடையே ஒருமித்த கருத்தேற்பட்டால் அவரது தடை நீக்கப்பட்டு மீண்டும் பங்களிக்க அனுமதிக்கப்படுவார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிப்பீடியா:கைப்பாவை&oldid=749224" இலிருந்து மீள்விக்கப்பட்டது