ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பாண்டியன் ஆரியப்படை கடந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
பாண்டியன் [[ஆரியப்படை]] கடந்த நெடுஞ்செழியன் சங்ககால அரசன். இவன் புலவராகவும் விளங்கினான். இவனது பாடல் புறநானூறு 183 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது. இந்தப் பாடலில் இவன் கல்வியின் மேன்மை பற்றிக் குறிப்பிடுகிறான்.
 
கல்வி கற்கவேண்டிய முறைமை
:கல்வி புகட்டும் ஆசிரியருக்குத் துன்பம் வரும்போது உதவ வேண்டும். அவருக்கு மிகுதியாகப் பொருள் கொடுக்க வேண்டும். அவர் எதைச் சொன்னாலும் அவர் சொன்னபடி நடப்பதில் சினம் காட்டலாகாது. இப்படிக் கற்றல் நன்மை பயக்கும் செயலாகும்.
ஒருவனுடன் பிறந்தவர் ஒருதாய் மக்கள் ஆனாலும் கல்விச் சிறப்பு பெறாதவரைத் தாயும் குறைத்தே மதிப்பிடுவாள். ஊராரும் மூத்தவன் வழியில் செல்லாமல் அறிவுடையவன் வழியைப் பின்பற்றும்பின்பற்றுவர். மக்கள் அந்தணர், அரசர், வணிகர், வேளாளாளர் என்று தொழிலால் நான்கு பகுதியாக மக்கள் மதிக்கப்படுகின்றனர். அவர்களில் கீழ்க்குடியில் பிறந்த ஒருவன் கற்றிருந்தால், மேல்குடியில் பிறந்தவனும் அந்தக் கீழ்க்குடிக் கல்வியாளன் வழியைப் பின்பற்றுவான்.
 
இவை இந்த நெடுஞ்செழியன் சொல்லும் '''பொருண்மொழி'''. (உலகியல்)
"https://ta.wikipedia.org/wiki/ஆரியப்படை_கடந்த_நெடுஞ்செழியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது