சென்னை முற்றுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
==முற்றுகை==
===முதலாவது தாக்குதல்===
[[File:Lally at Pondicherry by Paul Philipotteaux.jpg|thumb|சென்னையில் லில்லி ஒரு ஓவியம்]]
1758 இல் சென்னை நகரம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முதலாவது உள்ளூர் சுதேசிகள் வாழ்ந்த பிரதேசம் மற்றயது ஐரோப்பியர்கள் வாழ்ந்த பிரதேசம். ஐரோப்பியர்கள் வாழ்ந்த பிரதேசம் [[புனித ஜார்ஜ் கோட்டை]] உள்ளமைந்த பிரதேசமாக விருந்தது. 14 டிசம்பரில் பிரஞ்சுப் படைகள் சுதேசிகள் வாழ்ந்த பிரதேசத்தில் நுழைந்தது. எதிர்ப்பில்லாமல் உள்ளே நுழைந்த பிரஞ்சுப் படைகள் அங்கிருந்து வீடுகளில் கொள்ளையடித்தன. இதே நேரம் பிரித்தானியக் கோட்டையில் இருந்து கேர்ணல் வில்லியம் ட்ராப்பர் தலைமையில் வெளி வந்த 600 பேர் கொண்ட படையணி நகரில் சிதறி இருந்த பிரஞ்சுப் படைமீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலின் போது மிக மோசமான தெருச் சண்டை இருதரப்பிற்கும் இடையில் ஏற்பட்டது. இறுதியாக பிரித்தானியப் படை கோட்டையினுள்ளே நுழையும் போது இரு தரப்பிலும் குறைந்தது 300 பேர் இழப்பு ஏற்பட்டிருந்தது <ref>McLynn p.180-81</ref>. இந்த அதிரடித் தாக்குதல் பெரியளவில் யுத்த சமநிலையில் மாற்றம் ஏற்படுத்தாவிடினும் பிரஞ்சுப் படையினரில் மனோநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலின் போது ட்ராப்பர் தலைமயில் வந்த படையணியை மீள தப்பிச் செல்லாமல் தடுப்பதில் பிரஞ்சுப் படையினர் அடைந்த தோல்வியை இரண்டாம் நிலை கட்டளை அதிகாரியான புசி மீது லல்லி சுமத்தி பொதுவில் திட்டித் தீர்த்தார். ஆயினும் புசியை பதவியில் இருந்து லல்லி இறக்கவில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_முற்றுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது