"நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,010 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
 
===தரையிறக்கம்===
ஜூலை 9, 1943 அன்று இரவில் சிசிலி மீதான நேச நாட்டுத் தாக்குதல் தொடங்கியது. அமெரிக்க மற்றும் பிரித்தானிய வான்குடைப் படைப்பிரிவுகள், வான் வழியாக சிறு சிறு குழுக்களாக சிசிலியில் குத்தித்துத் தரையிறங்கின. பல முக்கிய பாலங்கள், அரண்நிலைகள், கடற்கரைப் பகுதிகளைக் கைப்பற்றி அச்சு படைகளிடையே குழப்பம் விளைவித்தனர். அன்றிரவு வானிலை சாதகாமாக அல்லாமல் வேகமான காற்றடித்துக் கொண்டிருந்ததால், வான்குடைப் படைப்பிரிவுகள் தங்கள் தாக்குதல்களைத் திட்டமிட்டபடி ஒருங்கிணைக்கவில்லை. எனினும் சாதகமற்ற வானிலையின் போது நிகழ்ந்த தாக்குதலை அச்சு பாதுகாவல் படைகள் சற்றும் எதிர்பாராததல், அவர்களது எதிர்வினை மெல்லவும், ஒருங்கிணைப்பின்றியும் ஆரம்பமானது. இக்குழப்பம் கடல்வழியே தரையிறங்கிய நேச நாட்டுத் தரைப்படைகளுக்கு சாதகமாக அமைந்தது.
 
ஜூலை 10 அன்று அதிகாலையில் கடல்வழி படையிறக்கம் ஆரம்பமானது. கிழக்கில் பிரித்தானிய மற்றும் கனடியப் படைகளும், மேற்கில் அமெரிக்கப் படைகளும் கடற்கரையோரமாக மொத்தம் 26 இடங்களில் தரையிறங்கினர். வானிலை மோசமாக இருந்ததால், தரையிறக்க ஒருங்கிணைப்பில் சிறிது குழப்பம் நிலவியது. ஆனால் நேச நாட்டுப் படைகளை கடற்கரைகளில் எதிர்க்க அச்சு பாதுகாவல் படைகள் திட்டமிடவில்லையென்பதால், பெரிய எதிர்ப்பு எதுவுமின்றி பல நேச நாட்டுப் படைப்பிரிவுகள் கரையேறின. இப்படையிறக்கம் அதுவரை வரலாற்றில் நிகழ்ந்திருந்த நீர்நிலத் தாக்குதல்களில் மிகப்பெரியதாகும். ஆங்காங்கு நிகழ்ந்த இத்தாலியப் பாதுகாவல் படைகளின் எதிர்த்தாக்குதல்கள் நேச நாட்டுப் படைகளால் எளிதில் முறியடிக்கப்பட்டுவிட்டன. படையெடுப்புக்கு முந்தைய வான்வழி குண்டுவீச்சினால் பெரும் சேதமடைந்திருந்த அச்சு வான்படைகளால் சிறிய தாக்குதலகளை மட்டுமே நிகழ்த்த இயன்றது. இத்தாக்குதல்களில் பல நேச நாட்டு கப்பல்களும், தரையிறங்கு படகுகளும் சேதமடைந்தன. ஜூலை 10 அன்று இரவில் நேச நாட்டு தரையிறக்கம் வெற்றிகரமாக முடிவடைந்தது. ஏழு [[டிவிசன்]கள் - 3 அமெரிக்க, 3 பிரித்தானிய மற்றும் 1 கனடிய டிவிசன்கள் - சிசிலியின் கடற்கரையில் தரையிறங்கியிருந்தன. படையெடுப்பின் அடுத்த கட்டமாக அவை சிசிலியின் உட்பகுதியை நோக்கி முன்னேறத் தொடங்கின.
 
===கடற்கரை முகப்புகளிலிருந்து முன்னேற்றம்===
===எட்னா மோதல்கள்===
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/751199" இருந்து மீள்விக்கப்பட்டது