பெருஞ்சித்திரனார் (சங்ககாலப் புலவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
===வெளிமான்===
பெருஞ்சித்திரனார் வெளிமான் வாயிலில் நின்றுகொண்டு "நீடு வாழ்க" என்று வாழ்த்திப் பாடினார். வெளிமான் அவருக்குக் கோடைக்காலத்தில் கொழுநிழல் போல உதவியவன். பொய்த்தல் அறியாதவன். அவன் செவியில் வித்திய பனுவல் அன்று விளையவில்லை. பானைக்குள்ளே அரிசியைப் போட்டுச் சமைக்கும்போது அது வெந்து அழல் கட்டிகளாக மாறி நமக்குத் தருவது போன்று அவர் நிலை ஆயிற்று. அவன் துஞ்சிவிட்டான். அவனைப் புதைத்த கள்ளிக்காட்டில் அவனது மகளிர் எருக்கிக்கொண்டதால் உடைந்த வளையல்கள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வாறு சொல்லிப் புலவர் இரங்குகிறார். (புறம் 237)

வெளிமான் கட்காமுறுநன்.

அவன் காடு முன்னினன்.

அவனுக்காகச் செய்யப்பட்ட தாழியில் அவன் வைக்கப்படவில்லை.

தாழியின் மேல் அமர்ந்துகொண்டு பருந்துகளும் காக்கைகளும் அவனை உணவாக்கிக்கொண்டன.

பேய்க்கூட்டமும் அவனைச் சுற்றித் திரிகின்றன.

வளையல் கழிந்த அவன் மகளிர் போலப் பாடுநர் கூட்டமும் பசுமையற்றுக் கிடக்கின்றன.

அவன் முரசு கிழிந்துகிடக்கிறது.

அவன் யானை தன்னைச் செலுத்துவோன் இல்லாமையால் தன் தந்தத்தை இழந்திவிட்டன.

கூற்றத்துக்கே பைத்தியம் பிடித்துவிட்டது.

அந்தோ! அளியேன் வந்தேன். என்னோடு வாழ்பவர் என்னாவர்?

மழை பொழியும் மகிழ்ச்சியில் இருப்பவன் மேல் மரம் சாய்ந்தது போல் ஆயிற்று.

கண்ணில்லாத ஊமையனை வெள்ளம் அடித்துச் செல்லும்போது சுழியில் அகப்பட்டுகொண்டது போல் ஆயிற்று.

:வெளிமான் இறந்தது கண்டு இவர் துன்றுற்ற நிலையை '''சித்திரப் படமாக்கிக் காட்டுகிறார்'''. (புறம் 238)

===இளவெளிமான்===