நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
[[File:Sicilymap2.jpg|right|thumb|250px|சிசிலியப் படையெடுப்பு வரைபடம்]]
நேசநாட்டுத் தரைப்படை களத் தளபதி ஹரால்ட் அலெக்சாந்தர் தரையிறக்கத்துக்கு அடுத்த கட்டமாக மேற்கில் லிக்காட்டா துறைமுகம் முதல் மேற்கே கட்டானியா துறைமுகம் வரையுள்ள பகுதிகளைக் கைப்பற்ற திட்டமிட்டிருந்தார். கிழக்கு குறிக்கோள் படைப்பிரிவின் பிரித்தானிய 8வது ஆர்மிக்கு பச்சீனோ வான்படைத் தளம், சிரக்கியூசு துறைமுகம், ஆகியவற்றைக் கைப்பற்றிய பைன் அகசுட்டா மற்றும் கட்டானிய துறைமுகங்களைக் கைப்பற்றும் இலக்கு தரப்பட்டது. மேற்கில் அமெரிக்க 7வது ஆர்மிக்கு போண்ட்டே ஓலிவியோ, பிசுக்காரி, கோமிசுக்கோ ஆகிய வான்படைத் தளங்களையும், லிக்காட்டா துறைமுகத்தையும் கைப்பற்றும் பொறுப்பு தரப்பட்டது. மேலும் பிரித்தானிய 8வது ஆர்மியின் கிழக்குதிசைப் பக்கவாட்டில் அச்சுப் படைகள் தாக்காவண்ணம் பாதுகாப்பும் பொறுப்பும் அதற்கு இருந்தது.
[[File:Bundesarchiv Bild 146-1977-160-12, Italienische Soldaten ergeben sich.jpg|right|thumb|250px|சரணடையும் இத்தாலியப் படைவீரர்கள்]]
 
ஜூலை 11ம் தேதி கடற்கரை முகப்புகளிலிருந்து இரு ஆர்மிகளும் அச்சுப் பாதுகாவல் படைகளை முறியடித்து முன்னேறத் தொடங்கின. மேற்கில் ஜூலை 12 அன்று போண்டே போலிவியோ கைப்பற்றப்பட்டது. கிழக்கில் ஜூலை 14 அன்று அகசுட்டா துறைமுகம் பிரித்தானிய 8வது ஆர்மியால் கைப்பற்றப்பட்டது. இரு குறிக்கோள் படைகளின் படைப்பிரிவுகளும் கைகோர்த்து சிசிலியில் தென்கிழக்கு பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன. இரு படைப்பிரிவுகளும் கைகோர்த்த பின்னர், சிசிலியின் நடுப்பகுதியில் முன்னேறி வடக்கிலிருந்த சான் ஸ்டீபானோ துறைமுகத்தைக் கைப்பற்ற அலெக்சாந்தர் திட்டமிட்டிருந்தார். இதன்மூலம் சிசிலியை கிழக்கு-மேற்காக இரண்டாகப் பிளப்பது அவர் எண்ணியிருந்தார். ஆனால் கட்டானியாவை உடனடியாக பிரித்தானிய 8வது ஆர்மியால் கைப்பற்ற இயலவில்லையென்பதால், மேற்கு கரையோரமாக முன்னேறி சிசிலியின் வடமேற்கிலிருந்த [[பாலெர்மோ]] துறைமுகத்தைக் கைப்பற்ற அமெரிக்க 7வது ஆர்மிக்கு உத்தரவிட்டார். ஜெர்மானியத் தரப்பில் சிசிலியின் மேற்கு பகுதியிலிருந்து பின்வாங்கி வடகிழக்கை மட்டும் பாதுகாக்க முடிவு செய்யபப்ட்டது. இத்தாலியப் படைப்பிரிவுகள் போர் திறனின்றி இருந்ததால், ஜெர்மானியத் தளபதி கெஸ்சல்ரிங் இந்த முடிவினை எடுத்தார். இதனால் சிசிலின் மேற்கு பகுதியிலிருந்த ஜெர்மானியப் படைப்பிரிவுகள் அமெரிக்க 7வது ஆர்மியின் முன்னேற்றத்தை எதிர்க்க வில்லை. வேகமாகப் பின்வாங்கி வடகிழக்குப் பகுதிகளுக்குச் சென்று விட்டன. எதிர்ப்பின்றி வேகமாக முன்னேறிய அமெரிக்கபப்டைகள் ஜூலை 22ம் தேதி பாலெர்மோ துறைமுகத்தைக் கைப்பற்றின. மேற்கு சிசிலியின் பெரும்பகுதி அமெரிக்கர் வசமானது.