முற்றொருமை உறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
[[கணிதம்|கணிதத்தில்]], '''முற்றொருமை உறுப்பு''' (''Identity element'') என்பது ஒரு [[கணம் (கணிதம்)|கணத்தில்]], அக்கணத்தின் மீது வரையறுக்கப்பட்ட [[ஈருறுப்புச் செயலி]]யைப் பொறுத்த ஒரு சிறப்பு உறுப்பாகும். கணத்தின் மற்ற உறுப்புகளோடு முற்றொருமை உறுப்பை ஈருறுப்புச் செயலுக்குட்படுத்தும் போது அந்த உறுப்புகளில் எந்தவித மாறுதலும் ஏற்படாது. [[குலம் (கணிதம்)|குலங்கள்]] மற்றும் [[குலமன் (இயற்கணிதம்)|குலமன்கள்]] சம்பந்தப்பட்ட கருத்துருக்களில் முற்றொருமை உறுப்பு பயன்படுத்தப்படுகிறது. முற்றொருமை உறுப்பைச் சுருக்கமாக முற்றொருமை என்றும் கூறலாம்.
 
(''S'',*) என்பது, கணம் ''S'' ம் அதில் வரையறுக்கப்பட்ட ஈருறுப்புச் செயலி * ம் சேர்ந்த குலமன் என்க. ''S'' ன் ஒரு உறுப்பு '''''e''''' ஆனது ''S'' லுள்ள ஏதேனும் ஒரு உறுப்பு ''a'',க்கு '''''e'' * ''a'' = ''a''''' எனில் இடது முற்றொருமை எனவும், '''''a'' * ''e'' = ''a''''' எனில் வலது முற்றொருமை எனவும் அழைக்கப்படுகிறது. ''e'' இடது மற்றும் வலது முற்றொருமை இரண்டுமாக இருந்தால் அது இருபக்க முற்றொருமை அல்லது முற்றொருமை என அழைக்கப்படுகிறது.
 
[[கூட்டல் (கணிதம்)|கூட்டல்]] செயலைப் பொறுத்த முற்றொருமை கூட்டல் முற்றொருமை (பெரும்பாலும் 0 எனக் குறிக்கப்படும்) எனவும் [[பெருக்கல் (கணிதம்)|பெருக்கல்]] செயலைப் பொறுத்த முற்றொருமை பெருக்கல் முற்றொருமை (பெரும்பாலும் 1 எனக் குறிக்கப்படும்) எனவும் அழைக்கப்படுகின்றன. வளையங்கள் போன்ற இரு ஈருறுப்புச் செயலிகளையும் கொண்ட கணங்களுக்கு இந்த இரு முற்றொருமைகளை வேறுபடுத்திக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பெருக்கல் முற்றொருமை பலநேரங்களில் அலகு என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் வளையத்தில் சில சமயங்களில் அலகு என்பது நேர்மாறு உடைய உறுப்பைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/முற்றொருமை_உறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது