பார்முலா 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
தொடக்க காலத்தில் பெருமளவு தானுந்து தயாரிப்பாளர்கள் பார்முலா 1-ல் பங்கேற்றனர். குறிப்பிடத்தக்கோர்- [[பெராரி]], [[ஆல்பா ரோமியோ]], [[மெர்சிடஸ் பென்ஸ்]], மாசராட்டி- இவர்கள் அனைவரும் உலகப் போருக்கு முன்னரும் இவ்வகைப் போட்டிகளில் பங்கேற்றோர் ஆவர். தொடக்க கால போட்டிகளில் உலகப் போருக்கு முந்தைய தானுந்து வடிவமைப்புகளே பயன்படுத்தப்பட்டன. எ-கா: ஆல்பா ரோமியோவின் 158. முன்பக்கத்தில் பொருத்தப்பட்ட எஞ்சினும் குறுகிய வட்டயங்களும் (டயர்கள்) பயன்படுத்தப்பட்டன. எஞ்சின்கள் மட்டின்றி அழுத்த மிகுதிப்படுத்தும் 1.5 லிட்டர் வடிவாகவோ, இயற்கையான காற்றை உறிஞ்சியிழுக்கும் 4.5 லிட்டர் வடிவாகவோ இருந்தன. 1952, 1953-ஆம் ஆண்டுகளில் பார்முலா 2 வகை தானுந்துகளே பயன்படுத்தப்பட்டன. ஏனெனில் அப்போது பார்முலா 1 தானுந்துகள் குறைவாகவே இருந்தன. அவை பார்முலா 1 தானுந்துகளை விட சிறியனவாகவும் ஆற்றலில் குறைந்தனவாகவும் இருந்தன. 1954-ஆம் ஆண்டு பார்முலா 1 விதிமுறைகளில் 2.5 லிட்டர் எஞ்சின் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. அப்போது மெர்சிடஸ் பென்ஸ் தனது மிகவும் மேம்பட்ட வடிவமைப்பான W196 என்ஜினை வெளியிட்டது. இந்த எஞ்சின் நேரடியான எரிபொருள் உள்ளீடு, டேச்மொட்ராமிக் ஊடிதழ் (desmodromic valve) மற்றும் மூடப்பட்ட சீரிசையோட்ட உடல் வடிவமைப்பு போன்றவற்றைக் கொண்டிருந்தது. மெர்சிடஸ் ஓட்டுனர்கள் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் வெற்றிக் கோப்பைகளைக் கைப்பற்றினர். ஆனால் 1955-ஆம் ஆண்டிறுதியில் அனைத்து வகைத் தானுந்து போட்டிகளிலிருந்தும் மெர்சிடஸ் வெளியேறியது. 1955-ஆம் ஆண்டு நிகழ்ந்த லே மான்ஸ் பேரிடர் இதன் காரணமாக கூறப்படுகிறது.
 
===பெரும் வளர்ச்சி===
 
மைய-எந்திர தானுந்து வடிவமைப்பை கூப்பர் நிறுவனம் மறு-அறிமுகம் செய்தது. இந்த வடிவமைப்பு 1950-களில் பார்முலா-3 தொடரில் வெற்றிகரமாக அந்நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்டதாகும். இத்திட்டம் மிகப் பெரிய அளவில் வெற்றியை ஈட்டித் தந்தது. ஆத்திரேலியரான ஜாக் பிரபாம் 1959, 1960 & 1966 ஆகிய ஆண்டுகளில் ஓட்டுனர் வெற்றிக் கோப்பையை வென்று, அவ்வித வடிவமைப்பின் தொழில்நுட்ப மேம்பாட்டை உறுதிப்படுத்தினார். ஆகையால் 1961 ஆண்டு வாக்கில் அனைத்து அணிகளும் மைய-எந்திர வடிவமைப்பில் தானுந்துகளை வடிவமைத்தன.
"https://ta.wikipedia.org/wiki/பார்முலா_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது