நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
இத்தாலி மீதான படையெடுப்பின் முதல் கட்டமாக, அதன் தெற்கில் உள்ள [[சிசிலி]] மீது ஜூலை 1943ம் தேதி நேச நாட்டுப் படைகள் [[நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு|படையெடுத்தன]]. ஒன்றரை மாத காலத்துக்குள் சிசிலி கைப்பற்றப்பட்டுவிட்டது. இத்த எளிதான வெற்றியால் இத்தாலியினையும் எளிதில் கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணம் வலுப்பட்டது. மேலும் சிசிலிப் படையெடுப்பால் இத்தாலிய ஆட்சியாளர்களிடையே மோதல் ஏற்பட்டு முசோலினி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இத்தாலி மீது படையெடுத்தால், அந்நாட்டு அரசு பயந்து பொய் அச்சுக் கூட்டணியிலிருந்து விலகிவிடும் எனவும் கருதினர்.
 
அவலான்ச் நடவடிக்கை என்ற குறிப்பெயரிடப்பட்டிருந்த இப்படையெடுப்பில் சாலர்னோ நகர் அருகே முக்கியத் தாக்குதல் நிகழ்த்த திட்டமிடப்பட்டது. இங்கு அமெரிக்க 5வது [[ஆர்மி (படைப்பிரிவு)|ஆர்மி]], அமெரிக்க 6வது [[கோர் (படைப்பிரிவு)|கோர்]] மற்றும் பிரித்தானிய 10வது கொரில் இடம்பெற்றிருந்த எட்டு [[டிவிசன்]]களும் இரண்டு [[பிரிகேட்]]களும் பங்கேற்றன. அமெரிக்க 82வது [[வான்குடை]] டிவிசன் இத்தாக்குதலுக்கான இருப்பு படைப்பிரிவாக இருந்தது. தரையிறங்கி பாலமுகப்புகளை பலப்படுத்தியபின் [[நாபொலி]] துறைமுக நகரைக் கைப்பற்றுவது இத்தாக்குதலின் முக்கிய இலக்கு. இந்த முதன்மைத் தாக்குதலுக்குத் துணையாக இத்தாலியில் மேலும் இரு இடங்களில் படைகளைத் தரையிறக்கத் திட்டமிடப்பட்டது. [[பெர்னார்ட் மோண்ட்கோமரி]] தலைமையிலான பிரித்தானிய 8வது ஆர்மி இத்தாலியின் “பெருவிரல்” என வர்ணிக்கப்பட்ட கலாபிரியா நகர் [[பேடவுன் நடவடிக்கை|அருகேயும்]], பிரித்தானிய 1வது வான்குடை டிவிசன் இத்தாலியின் குதிங்கால் என வர்ணிக்கப்பட்ட [[ஸ்லாப்ஸ்டிக் நடவடிக்கை|டாராண்டோ துறைமுகத்திலும்]] தரையிறங்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.
 
இப்படையெடுப்பை எதிர்கொள்ள தெற்கு இத்தாலியில் ஆகஸ்ட் 22, 1943ல் ஆறு டிவிசன்களைக் கொண்ட புதிய ஜெர்மானிய 10வது ஆர்மி உருவாக்கப்பட்டது. ஜெனரல் ஹைன்ரிக் வோன் வெய்ட்டிங்கோஃப் தலைமையிலான இப்படைப்பிரிவு [[ஃபீல்டு மார்சல்]] [[ஆல்பர்ட் கெஸ்சல்ரிங்]] தலைமையிலான ஜெர்மானியத் தெற்குத் தரைப்படைத் தலைமையகத்தின் கீழ் செயல்பட்டது. வடக்கு இத்தாலியில் இருந்த ஜெர்மானியப் படைகள் [[எர்வின் ரோம்மல்]] தலைமையிலான ஆர்மி குரூப் பி இன் கட்டுப்பாட்டில் இருந்தன.
 
==சண்டையின் போக்கு==