நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
 
==சண்டையின் போக்கு==
===தெற்கு இத்தாலிக்இத்தாலியக் களம்===
{{also|பேடவுன் நடவடிக்கை|ஸ்லாப்ஸ்டிக் நடவடிக்கை}}
 
செப்டம்பர் 3, 1943ல் பெர்னார்ட் மோண்ட்கோமரியின் பிரித்தானிய 8வது ஆர்மி கலாபிரியா அருகே தரையிறங்கியது. கனடிய மற்றும் பிரித்தானியப் படைப்பிரிவுகள் இடம்பெற்றிருந்த இந்த படைப்பிரிவு, சிசிலியிலிருந்து நேரடியாக தரையிறங்கு படகுகள் மூலம் இத்தாலியை அடைந்தன. பயணதூரம் மிகக்குறைவு என்பதால் கப்பல்களில் ஏறி பின் மீண்டும் தரையிறங்கு படகுகளுக்கு மாறி தரையிறங்க வில்லை. இவற்றின் தரையிறக்கத்துக்கு அச்சுப் படைகளிடமிருந்து பெரும் எதிர்ப்பு எதுவும் இல்லை. முதன்மை தரையிறக்கம் சாலெர்னோவில் தான் நிகழப்போகிறது என்பதை ஊகித்து விட்ட கெஸ்சல்ரிங் தனது படைகளை பின்வாங்க உத்தரவிட்டார். நேரடியாக மோதாமல் பாலங்களைத் தகர்த்தும், சாலைகளை மறித்தும் பிரித்தானியப் படை முன்னேற்றத்தை ஜெர்மானியர்கள் தாமதப்படுத்தினர். மேலும் தெற்கு இத்தாலியின் கரடுமுரடான புவியியல் அமைப்பு இது போன்ற தாமதப்படுத்தும் உத்திகளுக்கு சாதகமாக அமைந்தது. பின்வாங்கிய ஜெர்மானியப் படைகள் சாலெர்னோவில் நிகழவிருந்த முக்கியத் தரையிறக்கத்தை எதிர்க்கத் தயாராகின.
 
சாலெர்னோ தரையிறக்கம் ஆரம்பமாவதற்கு சற்று முன்னால், இத்தாலிய அரசு நேச நாடுகளிடம் சரணடைந்ததது. இத்தாலியுடனான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால், பெரும்பாலான இத்தாலியத் தரைப்படைப் பிரிவுகள் போரிடுவதை நிறுத்தின; கடற்படைக் கப்பல்கள் நேச நாட்டுத் துறைமுகங்களுக்குச் சென்று சரணடைந்தன. இத்தாலி சரணடைந்துவிடும் என்பதை எதிர்பார்த்திருந்த ஜெர்மானியர்கள் [[ஆக்சே நடவடிக்கை]]யின் மூலம் போரிட மறுத்த இத்தாலியப் படைப்பிரிவுகளின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். எனினும் இத்தாலியப் படைகளில் ஒரு சிறு பிரிவினர் தொடர்ந்து ஜெர்மனிக்கு ஆதரவாக நேச நாடுகளை எதிர்த்துப் போரிடுவதைத் தொடர்ந்தனர். செப்டம்பர் 9ம் தேதி பிரித்தானிய 1வது வான்குடை டிவிசன் டாராண்டோ துறைமுகத்தில் தரையிறங்கியது. எவ்வித எதிர்ப்புமின்றி எளிதாக டாராண்டோ நகரைக் கைப்பற்றின. இங்கும் ஜெர்மானியர்கள் தீவிரமாக எதிர்வினையாற்றாமல் பின்வாங்கிவிட்டனர். செபடம்பர் 11ம் தேதிக்குள் பாரி மற்றும் பிரிண்டிசி துறைமுகங்களும் நேச நாட்டுப் படைகள் வசமாகின.
 
===சாலெர்னோ தரையிறக்கங்கள்===
===ஜெர்மானிய எதிர்தாக்குதல்கள்===