"உலக தகவல் சமூக நாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,781 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
+சே
(துவக்கம்)
 
சி (+சே)
உலக தகவல் சமூக நாளின் முகனையான நோக்கம் உலகளவில் புதிய தகவல் தொழில்நுட்பங்களாலும் [[இணையம்|இணையத்தாலும்]] ஏற்பட்டுள்ள சமுதாய மாற்றங்களைக் குறித்த விழிப்புணர்ச்சியை வளர்ப்பதாகும். மேலும் இது [[எண்ணிம இடைவெளி]]யைக் குறைப்பதற்கு உதவிடும் இலக்கையும் கொண்டுள்ளது.
 
== உலகத் தகவல் சமூக நாள் ==
நவம்பர் 2005இல் நடந்த [[தகவல் சமூகத்திற்கான உலக மாநாடு]] தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களின் (ICT) இன்றியமையாமை மற்றும் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பல்வேறு எழுவினாக்களைக் குறித்துமான குவியத்தை ஏற்படுத்த மே 17ஆம் நாளை '''உலக தகவல் சமூக நாள்''' என்று அறிவிக்க [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]]க்கு வேண்டுகோள் விடுத்தது. மார்ச்சு 2006 அன்று பொதுச்சபை அவ்வாறே தீர்மானம் (A/RES/60/252) நிறைவேற்றியது. முதல் உலக தகவல் சமூக நாள் மே 17, 2006ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.<ref>{{cite web|url=http://www.un.org/News/Press/docs/2006/sgsm10433.doc.htm|title=In message for world information society day, Secretary-General calls for International countermeasure to enhance cybersecurity|date=26 April 2006}}</ref>
 
== உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக நாள் ==
நவம்பர் 2006 துருக்கியில் உள்ள அன்டால்யாவில் நடந்த பன்னாட்டுத் தொலைதொடர்பு ஒன்றியத்தின் முழு அதிகாரம் கொண்ட மாநாடு இரு நிகழ்வுகளையும் ஒன்றுபடுத்தி உலகத் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக நாளாகக் கொண்டாட தீர்மானித்தது. இற்றைப்படுத்தப்பட்ட தீர்மானம் 68 உறுப்பினர் நாடுகளையும் துறை உறுப்பினர்களையும் ஆண்டுதோறும் தேசியளவில் தகுந்த நிகழ்ச்சிகளை வடிவமைத்துக் கொண்டாடுமாறு அழைப்பு விடுத்தது.
 
==இதனையும் காண்க==
* [[அமைப்பு நிர்வாகி பாராட்டு நாள்]]
 
==மேற்கோள்கள்==
29,806

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/756397" இருந்து மீள்விக்கப்பட்டது