நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
 
===ஜெர்மானிய எதிர்தாக்குதல்கள்===
ஜெர்மானியப் படைப்பிரிவுகள் நேச நாட்டு கடற்கரை முகப்புக்கு வடக்கிலும், நேச நாட்டுப் படைப்பிரிவுகளுக்கு இடையே இருந்த இடைவெளியிலும் ஒரே நேரத்தில் தாக்கின. அதிரடியான இத்தாக்குதலால், நேச நாட்டு அரண்நிலைகள் கைப்பற்றப்பட்டு, சாலெர்னோ கடற்கரை முகப்பு வீழும் நிலை உருவானது. நேச நாட்டுத் தளபதிகள் அவசரமாக புதிய வான்குடைப் படைப்பிரிவுகளை சாலெர்னோவுக்கு அனுப்பி வைத்தனர். புதிய படைப்பிரிவுகளின் துணையுடன் ஜெர்மானிய முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கு கடற்கரையருகே நிறுத்தப்பட்டிருந்த நேச நாட்டுப் போர்க்கப்பல்களின் பீரங்கித் தாக்குதல்களும் பேருதவியாக இருந்தன. செப்டம்பர் 14ம் தேதி முதல் நேச நாட்டு வான்படை குண்டுவீசிகளும் தாக்குதலில் இணைந்து ஜெர்மானியப் படைநிலைகளின் மீது குண்டு வீசத் தொடங்கின. செப்டம்பர் 16ம் தேதி ஜெர்மானியர்கள் சலேர்னோ தரையிறக்கத்தை முறியடிக்க இறுதியாக ஒரு பெரும் தாக்குதலை மேற்கொண்டனர். அதுவும் தோற்கடிக்கப்பட்டது. சலேர்னோவில் ஜெர்மானியத் தாக்குதல் தொடங்கியபின்னர், கலாபிரியாவில் தரையிறங்கியிருந்த பிரித்தானிய 8வது ஆர்மியினை வடக்கு திசையில் சலேர்னோ நோக்கி முன்னேறும் படி நேச நாட்டு தளபதிகள் ஆணையிட்டனர். இத்தாலியின் தெற்குக் கடற்கரையெங்கும் சிதறிக்கிடந்த தன் படைப்பிரிவுகளை அவசரமாக ஒருங்கிணைத்த மோண்ட்கோமரி சலேர்னோவிலிருந்த படைகளின் உதவிக்கு வடக்கு நோக்கி விரைந்தார்.
 
===இறுதிகட்டம்===