நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 24:
==பின்புலம்==
 
மே 1943ல் [[வடக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர்|வடக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடரில்]] நேச நாடுகள் முழுவெற்றி கண்டன. [[வடக்கு ஆப்பிரிக்கா]]விலிருந்து அச்சுப் படைகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டுவிட்டன. போரின் அடுத்த கட்டமாக [[இத்தாலி]] மீது படையெடுக்க நேச நாட்டு மேல்நிலை உத்தியாளர்கள் முடிவு செய்தனர். [[பாசிசம்|பாசிச]] சர்வாதிகாரி [[முசோலினி]]யின் ஆட்சியின் கீழிலிருந்த இத்தாலி [[அச்சு நாடுகள்|அச்சு நாட்டு]]க் கூட்டணியில் [[இட்லர்|இட்லரின்]] [[நாசி ஜெர்மனி]]க்கு அடுத்த முக்கிய அங்க நாடாக இருந்தது. இத்தாலியைக் கைப்பற்றுவது அச்சுக் கூட்டணியை வெகுவாக பலவீனப்படுத்துவதுடன், பரப்புரையளவில் மிகப்பெரும் வெற்றியாக அமையும் என அவர்கள் கருதினர். மேலும் இத்தாலியின் வீழ்ச்சி [[நடுநிலக் கடல்|நடுநிலக் கடலில்]] நேச நாட்டு சரக்குக்கப்பல் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக விளங்கிய அச்சு வான்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளை செயலிழக்கச் செய்யும் என்பது நெசநேச நாட்டு உத்தியாளர்களின் கணிப்பு.
 
நடுநிலக்கடல் பகுதியில் [[கடல் ஆளுமை|கடல்]] மற்றும் [[வான் ஆளுமை]] கிட்டினால் மத்திய கிழக்கு மற்றும் ஆசியப் போர்முனைகளுக்கு தளவாடங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம், அவற்றை [[சோவியத் ஒன்றியம்|சோவிய ஒன்றியத்துக்கு]] தளவாடங்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தலாம் என கருதினார். அதோடு இத்தாலியில் போர் குறித்து மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வந்தது. அந்நாடு மீது படையெடுத்தால் மக்கள் பாசிச ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திரும்பிவிடுவார்கள் என்றும் கருதப்பட்டது. மேலும் இப்படையெடுப்பால் [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|கிழக்குப் போர்முனைக்குச்]] செல்ல வேண்டிய பல ஜெர்மானிய படைப்பிரிவுகளை இத்தாலியில் முடக்கி விடலாம் எனவும் கருதப்பட்டது.