நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 20:
{{போர்த்தகவல்சட்டம் இத்தாலியப் போர்த்தொடர்}}
 
'''நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு''' (''Allied invasion of Italy'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது நடைபெற்ற ஒரு பெரும் படையெடுப்பு. '''அவலான்ச் நடவடிக்கை''' (''Operation Avalanche'') என்று குறிப்பெயரிடப்பட்ட இதில் [[நேச நாடுகள்|நேச நாட்டுப்]] படைகள் [[பாசிசம்|பாசிச]] [[இத்தாலி]]யின் மீது படையெடுத்தன. இது [[இத்தாலியப் போர்த்தொடர்|இத்தாலியப் போர்த்தொடரின்]] ஒரு பகுதியாகும். இத்தாலியின் மேற்கு கடற்கரையில் [[சலேர்னோ]] நகரருகே நேச நாட்டுப் படைகள் தரையிறங்கின. அவற்றுக்குத் துணையாக [[கலாபிரியாகலபிரியா]] பகுதியில், [[டாராண்டோ]] நகரத்தின் அருகிலும் மேலும் இரு தரையிறக்கங்கள் நடை பெற்றன.
 
==பின்புலம்==
வரிசை 30:
இத்தாலி மீதான படையெடுப்பின் முதல் கட்டமாக, அதன் தெற்கில் உள்ள [[சிசிலி]] மீது ஜூலை 1943ம் தேதி நேச நாட்டுப் படைகள் [[நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு|படையெடுத்தன]]. ஒன்றரை மாத காலத்துக்குள் சிசிலி கைப்பற்றப்பட்டுவிட்டது. இத்த எளிதான வெற்றியால் இத்தாலியினையும் எளிதில் கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணம் வலுப்பட்டது. மேலும் சிசிலிப் படையெடுப்பால் இத்தாலிய ஆட்சியாளர்களிடையே மோதல் ஏற்பட்டு முசோலினி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இத்தாலி மீது படையெடுத்தால், அந்நாட்டு அரசு பயந்து பொய் அச்சுக் கூட்டணியிலிருந்து விலகிவிடும் எனவும் கருதினர்.
 
அவலான்ச் நடவடிக்கை என்ற குறிப்பெயரிடப்பட்டிருந்த இப்படையெடுப்பில் சாலர்னோ நகர் அருகே முக்கியத் தாக்குதல் நிகழ்த்த திட்டமிடப்பட்டது. இங்கு அமெரிக்க 5வது [[ஆர்மி (படைப்பிரிவு)|ஆர்மி]], அமெரிக்க 6வது [[கோர் (படைப்பிரிவு)|கோர்]] மற்றும் பிரித்தானிய 10வது கொரில் இடம்பெற்றிருந்த எட்டு [[டிவிசன்]]களும் இரண்டு [[பிரிகேட்]]களும் பங்கேற்றன. அமெரிக்க 82வது [[வான்குடை]] டிவிசன் இத்தாக்குதலுக்கான இருப்பு படைப்பிரிவாக இருந்தது. தரையிறங்கி பாலமுகப்புகளை பலப்படுத்தியபின் [[நாபொலி]] துறைமுக நகரைக் கைப்பற்றுவது இத்தாக்குதலின் முக்கிய இலக்கு. இந்த முதன்மைத் தாக்குதலுக்குத் துணையாக இத்தாலியில் மேலும் இரு இடங்களில் படைகளைத் தரையிறக்கத் திட்டமிடப்பட்டது. [[பெர்னார்ட் மோண்ட்கோமரி]] தலைமையிலான பிரித்தானிய 8வது ஆர்மி இத்தாலியின் “பெருவிரல்” என வர்ணிக்கப்பட்ட கலாபிரியாகலபிரியா நகர் [[பேடவுன் நடவடிக்கை|அருகேயும்]], பிரித்தானிய 1வது வான்குடை டிவிசன் இத்தாலியின் குதிங்கால் என வர்ணிக்கப்பட்ட [[ஸ்லாப்ஸ்டிக் நடவடிக்கை|டாராண்டோ துறைமுகத்திலும்]] தரையிறங்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.
 
இப்படையெடுப்பை எதிர்கொள்ள தெற்கு இத்தாலியில் ஆகஸ்ட் 22, 1943ல் ஆறு டிவிசன்களைக் கொண்ட புதிய ஜெர்மானிய 10வது ஆர்மி உருவாக்கப்பட்டது. ஜெனரல் ஹைன்ரிக் வோன் வெய்ட்டிங்கோஃப் தலைமையிலான இப்படைப்பிரிவு [[ஃபீல்டு மார்சல்]] [[ஆல்பர்ட் கெஸ்சல்ரிங்]] தலைமையிலான ஜெர்மானியத் தெற்குத் தரைப்படைத் தலைமையகத்தின் கீழ் செயல்பட்டது. வடக்கு இத்தாலியில் இருந்த ஜெர்மானியப் படைகள் [[எர்வின் ரோம்மல்]] தலைமையிலான ஆர்மி குரூப் பி இன் கட்டுப்பாட்டில் இருந்தன.
வரிசை 38:
{{also|பேடவுன் நடவடிக்கை|ஸ்லாப்ஸ்டிக் நடவடிக்கை}}
 
செப்டம்பர் 3, 1943ல் பெர்னார்ட் மோண்ட்கோமரியின் பிரித்தானிய 8வது ஆர்மி கலாபிரியாகலபிரியா அருகே தரையிறங்கியது. கனடிய மற்றும் பிரித்தானியப் படைப்பிரிவுகள் இடம்பெற்றிருந்த இந்த படைப்பிரிவு, சிசிலியிலிருந்து நேரடியாக தரையிறங்கு படகுகள் மூலம் இத்தாலியை அடைந்தன. பயணதூரம் மிகக்குறைவு என்பதால் கப்பல்களில் ஏறி பின் மீண்டும் தரையிறங்கு படகுகளுக்கு மாறி தரையிறங்க வில்லை. இவற்றின் தரையிறக்கத்துக்கு அச்சுப் படைகளிடமிருந்து பெரும் எதிர்ப்பு எதுவும் இல்லை. முதன்மை தரையிறக்கம் சலேர்னோவில் தான் நிகழப்போகிறது என்பதை ஊகித்து விட்ட கெஸ்சல்ரிங் தனது படைகளை பின்வாங்க உத்தரவிட்டார். நேரடியாக மோதாமல் பாலங்களைத் தகர்த்தும், சாலைகளை மறித்தும் பிரித்தானியப் படை முன்னேற்றத்தை ஜெர்மானியர்கள் தாமதப்படுத்தினர். மேலும் தெற்கு இத்தாலியின் கரடுமுரடான புவியியல் அமைப்பு இது போன்ற தாமதப்படுத்தும் உத்திகளுக்கு சாதகமாக அமைந்தது. பின்வாங்கிய ஜெர்மானியப் படைகள் சலேர்னோவில் நிகழவிருந்த முக்கியத் தரையிறக்கத்தை எதிர்க்கத் தயாராகின.
 
சலேர்னோ தரையிறக்கம் ஆரம்பமாவதற்கு சற்று முன்னால், இத்தாலிய அரசு நேச நாடுகளிடம் சரணடைந்ததது. இத்தாலியுடனான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால், பெரும்பாலான இத்தாலியத் தரைப்படைப் பிரிவுகள் போரிடுவதை நிறுத்தின; கடற்படைக் கப்பல்கள் நேச நாட்டுத் துறைமுகங்களுக்குச் சென்று சரணடைந்தன. இத்தாலி சரணடைந்துவிடும் என்பதை எதிர்பார்த்திருந்த ஜெர்மானியர்கள் [[ஆக்சே நடவடிக்கை]]யின் மூலம் போரிட மறுத்த இத்தாலியப் படைப்பிரிவுகளின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். எனினும் இத்தாலியப் படைகளில் ஒரு சிறு பிரிவினர் தொடர்ந்து ஜெர்மனிக்கு ஆதரவாக நேச நாடுகளை எதிர்த்துப் போரிடுவதைத் தொடர்ந்தனர். செப்டம்பர் 9ம் தேதி பிரித்தானிய 1வது வான்குடை டிவிசன் டாராண்டோ துறைமுகத்தில் தரையிறங்கியது. எவ்வித எதிர்ப்புமின்றி எளிதாக டாராண்டோ நகரைக் கைப்பற்றின. இங்கும் ஜெர்மானியர்கள் தீவிரமாக எதிர்வினையாற்றாமல் பின்வாங்கிவிட்டனர். செபடம்பர் 11ம் தேதிக்குள் பாரி மற்றும் பிரிண்டிசி துறைமுகங்களும் நேச நாட்டுப் படைகள் வசமாகின.
வரிசை 46:
 
===ஜெர்மானிய எதிர்தாக்குதல்கள்===
ஜெர்மானியப் படைப்பிரிவுகள் நேச நாட்டு கடற்கரை முகப்புக்கு வடக்கிலும், நேச நாட்டுப் படைப்பிரிவுகளுக்கு இடையே இருந்த இடைவெளியிலும் ஒரே நேரத்தில் தாக்கின. அதிரடியான இத்தாக்குதலால், நேச நாட்டு அரண்நிலைகள் கைப்பற்றப்பட்டு, சாலெர்னோ கடற்கரை முகப்பு வீழும் நிலை உருவானது. நேச நாட்டுத் தளபதிகள் அவசரமாக புதிய வான்குடைப் படைப்பிரிவுகளை சாலெர்னோவுக்கு அனுப்பி வைத்தனர். புதிய படைப்பிரிவுகளின் துணையுடன் ஜெர்மானிய முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கு கடற்கரையருகே நிறுத்தப்பட்டிருந்த நேச நாட்டுப் போர்க்கப்பல்களின் பீரங்கித் தாக்குதல்களும் பேருதவியாக இருந்தன. செப்டம்பர் 14ம் தேதி முதல் நேச நாட்டு வான்படை குண்டுவீசிகளும் தாக்குதலில் இணைந்து ஜெர்மானியப் படைநிலைகளின் மீது குண்டு வீசத் தொடங்கின. செப்டம்பர் 16ம் தேதி ஜெர்மானியர்கள் சலேர்னோ தரையிறக்கத்தை முறியடிக்க இறுதியாக ஒரு பெரும் தாக்குதலை மேற்கொண்டனர். அதுவும் தோற்கடிக்கப்பட்டது. சலேர்னோவில் ஜெர்மானியத் தாக்குதல் தொடங்கியபின்னர், கலாபிரியாவில்கலபிரியாவில் தரையிறங்கியிருந்த பிரித்தானிய 8வது ஆர்மியினை வடக்கு திசையில் சலேர்னோ நோக்கி முன்னேறும் படி நேச நாட்டு தளபதிகள் ஆணையிட்டனர். இத்தாலியின் தெற்குக் கடற்கரையெங்கும் சிதறிக்கிடந்த தன் படைப்பிரிவுகளை அவசரமாக ஒருங்கிணைத்த மோண்ட்கோமரி சலேர்னோவிலிருந்த படைகளின் உதவிக்கு வடக்கு நோக்கி விரைந்தார்.
 
===இறுதிகட்டம்===