நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
 
===இறுதிகட்டம்===
[[File:Bundesarchiv Bild 183-J15460, Italien, Soldaten beim Laden einer Pak.jpg|right|thumb|300px|சலேர்னோ அருகே ஜெர்மானிய பீரங்கிக் குழு]]
செப்டம்பர் 16ம் தேதி மோண்ட்கொமரியின் படைப்பிரிவுகள் சலேர்னோவை அடைந்து அங்கிருந்த நேச நாட்டுப் படைப்பிரிவுகளுடன் கை கோர்த்து விட்டன. புதிய படைப்பிரிவுகளின் வரவு, நேச நாட்டு வான்படைகளின் [[வான் ஆளுமை]], போர்க்கப்பல்களின் பீரங்கி குண்டு வீச்சு ஆகியவற்றால், ஜெர்மானியர்கள் தங்களின் எதிர்த்தாக்குதலின் தோல்வி உறுதி என்பதை உணர்ந்தனர். செப்டம்பர் 18ம் தேதி அவர்கள் தங்கள் தாக்குதலைக் கைவிட்டு பின்வாங்கத் தொடங்கினர். சலேர்னோ கடற்கரை முகப்புக்கு இருந்த ஆபத்து விலகியவுடன், அமெரிக்க 5வது ஆர்மி நாபொலி துறைமுகத்தை நோக்கி முன்னேறத் தொடங்கியது. 22ம் தேதி அசேர்னோ நகரும் 28ம் தேதி அவெலீனோ நகரும் நேச நாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்டன. அவை நாபொலி நகரை நெருங்கிய போது செப்டம்பர் 27ம் தேதி அந்நகர மக்களும் எதிர்ப்புப் படைகளும் ஜெர்மானியப் படைகளுக்கு எதிராக [[நாபொலியின் நான்கு நாட்கள்|பெரும் கிளர்ச்சி]] ஒன்றைத் தொடங்கினர். அக்டோபர் 1ம் தேதி நேச நாட்டுப் படைப்பிரிவுகள் நாபொலி நகருக்குள் நுழைந்தன. அக்டோபர் 6ம் தேதி 5வது ஆர்மி [[வல்ட்டூர்னோ ஆறு|வல்ட்டூர்னோ ஆற்றை]] அடைந்து விட்டது.