அனல் மின் நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hi:ऊष्मीय शक्ति संयंत्र
No edit summary
வரிசை 4:
 
இந்த முறையிலான மின்னுற்பத்திக்கு [[நீர்]], [[நிலக்கரி]] ஆகியவை முக்கிய தேவைகள் என்பதால், இவை அதிகமாக அல்லது எளிதாகக் கிடைக்கக் கூடிய இடங்களில், '''அனல் மின் நிலையங்கள்''' நிறுவப்படுகின்றன. பொதுவாக அனல் மின் நிலையங்கள் நிலக்கரியை எரிபொருளாக உபயோகித்தாலும், இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை எரிபொருளாகக் கொண்ட பல அனல் மின் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
===== குலசை அனல் மின் நிலையம்-தூத்துக்குடி மாவட்டம் =====
 
ஊருக்குள் நுழையுமுன்பே பிரமாண்டமாய் நம்மை வரவேற்பது புதிதாக தொடங்கப் பட்டு பணிகள் நடந்து வரும் புதிய அனல் மின் நிலையம்.
760 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தினில் இது கட்டப்படுகிறது தமிழ் நாடு மின்சார வாரியமும்,பாரத் மிகு மின் நிறுவனமும் இணைந்து 2x800 மெகாவாட் மிக உய்ய அனல் மின் திட்டம் ஒன்றை, உடன்குடி பவர் கார்ப்பரேசன் லிட் (Udangudi Power Corporation Ltd) என்ற பெயரில் உடன்குடி கிராம எல்லைக்குட்பட்டு, குலசையின் தொடக்கத்தில் மிக பிரமாண்டமாய் துவக்கப்பட்டு, ஆரம்ப வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. திட்ட மதிப்பீடு ரூ.8694 கோடி. முடிவடைந்து பயனுக்கு வரும் காலம் 2015. இது நமதூர் மக்களுக்கு மகிழ்வு தரும் செய்தியாகும். இதற்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையம் ஒன்றும் இங்கு கட்டப்படவுள்ளது. இந்த நீரைக் கொண்டு இயந்திரங்கள் குளிர்விக்கப்படும். மேலும் இந்த மின் நிலையம் நிலக்கரியின் எரி சக்தியால் இயங்கப் படவுள்ளதால், கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட்டு அனல் மின் நிலயத்திற்கு கன்வேயர் பெல்ட்டுகள் மூலம் (நம் தலைக்கு மேலே) கொண்டு வர திட்டம். நம்ப முடியவில்லையா! கொஞ்ச காலம் பொறுத்திருங்கள். இதற்காக கடலுக்குள் 7 கி.மீ தொலைவில் ஒரு ஜெட்டி(coal Jetty) எனும் கப்பல் நிறுத்துமிடம் கட்டப்படவுள்ளது. ராட்சத மின் இயந்திரங்கள் BHEL ல் இருந்து தயாரிக்கப்பட்டுக் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் கடல் வாழ் உயிரனங்களுக்கு எந்த ஆபத்துமில்லை என திட்ட அறிக்கைகள் கூறுகின்றன.
இன்று மின் வெட்டு, மின் அழுத்தக் குறைவு போன்ற காரணங்களால் நம் மக்கள் கடுமையான அவதிக்குட்பட்டு வாழ்ந்து வரும் நிலையில், நம் மக்களுக்கு இத்திட்டம் ஒரு வரப் பிரசாதமாகும். மின் உற்பத்தி துவங்கியதும் சீரான மின் பகிர்வினால் எந்த வித இடையூறுமின்றி வாழலாம் என நம்பிக்கையோடு காத்திருப்போம். தகவல்:குலசை சுல்தான்
 
[[பகுப்பு:அனல் மின் நிலையங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அனல்_மின்_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது