மகாபாரதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Srkris (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Kurukshetra.jpg|thumb|250px|குருச்சேத்திரப்குருக்ஷேத்திரப் போரை விளக்கும் படம்]]
'''மகாபாரதம்''' [[பாரதம்|பாரதத்தின்]] இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது [[இராமாயணம்]]. [[வியாசர்|வியாச முனிவர்]] சொல்ல [[விநாயகர்]] எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்தில்]] இயற்றப்பட்டுள்ளது. [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டப்]] பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.
 
வரிசை 16:
 
== உள்ளடக்கப் பரப்பு ==
இது, [[குருசேத்திரப்குருக்ஷேத்திரப் போர்]] எனப்படும், [[பாண்டவர்]]களுக்கும், [கௌரவர்]]களுக்கும் இடையிலான பெரும் போரை மையப்படுத்திய கதையாக இருந்தபோதிலும், இதில், [[மெய்யியல்]], [[சமயம்]] என்பன தொடர்பான உள்ளடக்கங்களும் பெருமளவில் உள்ளன. [[பகவத் கீதை]], மனித வாழ்வின் நால்வகை நோக்கங்கள் தொடர்பான விளக்கங்கள் போன்றவை இவற்றுள் அடக்கம்.
 
மகாபாரதம் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியிருப்பதாகக் கூறுகிறது. இதன் முதலாம் பர்வம், "இதில் காணப்படுபவை வேறிடங்களிலும் காணப்படலாம். இதில் காணப்படாதவை வேறெங்கும் காணப்படா" என்கிறது. இவ்விதிகாசத்தினுள் அடங்கியுள்ள முக்கிய ஆக்கங்களும் கதைகளும் கீழே பட்டியலிடப்படுகின்றன.
 
* '''பகவத் கீதை''': இது மகாபாரதத்தின் ஆறாவது பர்வமான பீஷ்மபர்வத்தில் அடங்கியுள்ளது. குருசேத்திரப்குருக்ஷேத்திரப் போரின் தொடக்கத்தில், அப்போர் தேவைதானா என [[அருச்சுனன்|அருச்சுனனுக்கு]] ஏற்பட்ட ஐயத்தையும், தொய்வையும் நீக்குவதற்காகக் கண்ணன் கூறிய அறிவுரைகளை உள்ளடக்கியது இது.
* '''விதுர நீதி''': இது ஐந்தாம் பருவமான உத்யோக பருவத்தில் வருகிறது. திருதராட்டிரனுக்கு, விதுரன் ஓர் இரவு முழுவதும், மனிதன் எப்படி இருக்க வேண்டும்; எப்படி இருக்கக் கூடாது; என்னென்ன செய்ய வேண்டும்; என்னென்ன செய்யக் கூடாது என்கிற வாழ்வியல் நீதிநெறிகளை விளக்கிக் கூறும் பகுதி இது.
* '''நளன், தமயந்தி கதை''': இதிகாசத்தின் மூன்றாம் பர்வமான ஆரண்யகபர்வத்தில் காணப்படுகின்றது. இது [[நளன்]] என்னும் அரசனும், [[தமயந்தி]] என்னும் இளவரசியும் காதலித்து மணம்புரிந்து கொள்வதையும், பின்னர் நளன் சனியால் பீடிக்கப்பட்டு நாடிழந்து பல ஆண்டுகள் அல்லலுற்று மீண்டும் இழந்த அரசுரிமையைப் பெறுவதையும் கூறும் கதை.
வரிசை 57:
 
== வரலாற்றுச் சூழல் ==
வரலாற்று நோக்கில் குருசேத்திரப்குருக்ஷேத்திரப் போர் பற்றித் தெளிவு இல்லை. இப்படி ஒரு போர் நிகழ்ந்திருப்பின் அது கிமு 10 ஆம் நூற்றாண்டளவில் [[இரும்புக் காலம்|இரும்புக் காலத்தில்]] நடைபெற்று இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இதிகாசத்தின் பொதுவான சூழலும் இரும்புக் காலத்தில் வேதகாலச் சூழலில் நடந்ததாகவே தெரிகிறது. கிமு 1200 - 800 காலப்பகுதியில், குரு இராச்சியம் அரசியல் அதிகார மையமாக இருந்திருக்கலாம். இக்காலத்தில் இடம்பெற்ற வம்சம் சார்ந்த பிணக்கு ஒன்று தொடக்ககால பாரதம் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்திருக்கக் கூடும்.
 
புராண இலக்கியங்கள் மகாபாரதத்துடன் தொடர்புடைய மரபுகளின் பட்டியல்களைத் தருகின்றன. புராணங்களில் இருந்து கிடைக்கும் சான்றுகள் இரு வகைப்படுவன. முதல்வகை நேரடிச் சான்று. இவ்வகைச் சான்றொன்றில், அருச்சுனனின் பேரனான [[பரீட்சித்து]]வுக்கும், [[மகாபத்ம நந்தன்|மகாபத்ம நந்தனின்]] பதவியேற்புக்கும் இடையே 1015 ஆண்டுகள் (அல்லது 1050 ஆண்டுகள்) உள்ளது என்பது தெரியவருகிறது. மகாபத்ம நந்தனின் பதவியேற்பு கிமு 382 எனக் கணிக்கப்பட்டுள்ளதால் பாரதப் போர்க் காலத்தை ஏறத்தாழ கிமு 1400 எனக் கணிக்கலாம். ஆனால் இது, மரபு வழிகளில் குறிக்கப்பட்டுள்ள அரசர்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட முடியாத அளவுக்கு நீண்ட ஆட்சிக் காலங்களைத் தருகிறது. இரண்டாவது வகைச் சான்றுகள் புராணங்களில் கூறப்பட்டுள்ள இணை மரபுவழிகளைப் பகுத்தாய்ந்து பெறுவதாகும். பரீட்சித்துவின் கொள்ளுப் பேரனான அதிசிமகிருஷ்ணனுக்கும், மகாபத்ம நந்தனுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த மரபு வழிகள் ஒப்பிடப்பட்டன. இதன்படி பாரதப் போர்க் காலம் ஏறத்தாழ கிமு 950 எனக் கணிக்கப்பட்டுள்ளது. [[பி. பி. லால்]] என்பார் இதே முறையைப் பயன்படுத்திப் பாரதப் போர்க் காலத்தை கிமு 836 எனக் கணித்துள்ளார். அத்துடன் இக் காலத்தை, நிறந்தீட்டிய சாம்பல்நிற மட்பாண்டக் களங்களில் கிடைக்கும் [[தொல்லியல்]] சான்றுகளுடனும் ஒப்பிட்டு ஆய்ந்துள்ளார்.
வரிசை 64:
 
== கதைச் சுருக்கம் ==
மகாபாரதத்தின் அடிப்படைக் கதை குரு வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்த அஸ்தினாபுரத்தின் ஆட்சி உரிமை பற்றிய பிணக்கு ஆகும். இரு சகோதரர்களின் வழிவந்தவர்களான கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையிலேயே இப் பிணக்கு நிகழ்ந்தது. கௌரவர்களே இவர்களுள் மூத்த மரபினராக இருந்தாலும், கௌரவர்களில் மூத்தோனாகிய [[துரியோதனன்]], பாண்டவர்களில் மூத்தோனாகிய தருமனிலும் இளையவனாக இருந்தான். இதனால் துரியோதனன், தருமன் இருவருமே ஆட்சியுரிமையை வேண்டி நின்றனர். இப்பிணக்கு இறுதியில் குருசேத்திரப்குருக்ஷேத்திரப் போராக வெடித்தது. இதில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. இப் போர் உறவுமுறை, நட்பு போன்றவை தொடர்பான சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தியது.
 
மகாபாரதம் கண்ணனின் இறப்புடனும் தொடர்ந்த அவருடைய மரபின் முடிவுடனும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதுடனும் நிறைவடைகிறது. அத்துடன் இதன் முடிவுடன் [[கலியுகம்]] தொடங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மகாபாரதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது