இடுக்கி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎குறிப்பிடத்தக்க இடங்கள்: வரலாறு என்னும் பகுதி சேர்ப்பு
வரிசை 29:
[[படிமம்:Munnar tea gardens.jpg|thumb|left|500px|மூணாறு தேயிலைத்தோட்டங்கள்]]
 
==வரலாறு==
இடுக்கி மாவட்டத்தின் தொன்மையான (பழங்கற்கால paleolithic age) வரலாறு தெளிவாக அறியப்படவில்லை. இன்றைய இடுக்கி மாவட்டம் முன்னாளில் சேர நாட்டையும் கொங்கு நாட்டையும் சேர்ந்த பகுதியாக இருந்தது. கி.பி 800-1100 காலப்பகுதியில் [[தேவிகுளம்]], உடும்பஞ்சோளா, [[பீர்மேடு]] போன்றவை அடங்கிய உயர் மலைத்தொடர் பகுதிகள் வேம்பொளி நாட்டின் பட்குதியாக இருந்தன. 16 ஆவது நூற்றாண்டில் இடுக்கியின் பெரும்பகுதி பூஞ்சார் இராசா அவர்களின் ஆட்சிக்குகீழ் வந்தது.
 
இடுக்கியின் அண்மைக்கால வரலாறு, ஐரோப்பிய காப்பி-தேயிலைத் தோட்டப் பயிர்த்தொழில் முதலாளிகளின் செயற்பாடுகளில் இருந்து தொடங்குகின்றது. 1877 இல் பூஞ்சார் இராசா கேரள வர்மா கண்ணன் தேவன் மலைகளில் 590 சதுர கி.மீ (227 சதுர மைல்) இடத்தை சான் டேனியல் மன்ரோ (John Danial Manroe) என்னும் பிரித்தானிய தோட்டத் தொழில் முதலாளிக்கு குத்தகைக்கு விட்டார். அக்காலப் பகுதியில் இவ்விடம் அடர்ந்த காடுகளாக இருந்தது. சான் மன்ரோ வட திரிவிதாங்கூர் நிலத் தோட்டம் பயிர்த்தொழில் குமுகம் ஒன்றை நிறுவினார். இக் குமுகத்தின் உறுப்பினர்கள் உயர்நிலப்பகுதிகளில் பல தோட்டங்கள் நிறுவினர், சாலைகள் அமைத்தனர், போக்கு வரத்து வசதிகள் செய்தனர். இதன் பயனாய் வீடுகள் அமைப்பதும் விளைபொருள்களை எடுத்துச்செல்வதும் எளிதாயிற்று.
 
[[பகுப்பு:கேரள மாநிலத்திலுள்ள மாவட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இடுக்கி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது