யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
* [[பிட்டு]]: பிட்டு அரிசி மாவில் மட்டுமன்றி, குரக்கன் மா, ஒடியல் மா போன்றவற்றிலும், அவிக்கப்பட்டு வந்தது. இப்பொழுது, கோதுமை கலந்து அவிக்கப்படுவது உண்டு. பிட்டு எந்தக் கறியுடனும் உண்ணப்படக்கூடியது. பிட்டுக்குப் பால் சேர்த்துப் பால் பிட்டு எனவும், சீனி சேர்த்து சீனிப் பிட்டு எனவும் உண்பது உண்டு.
* [[அப்பம்]]: ஒரு நாள் முன்னரே அரிசியை ஊறவைத்து இடித்து நீருடன் கலந்து புளிக்கவிட்டு அப்பம் சுடுவார்கள். வெறுமனே சுடப்படும் அப்பம் ''வெள்ளையப்பம்'' என்றும், சுடும்போது நடுவிலே தேங்காய்ப் பால் ஊற்றிச் சுடப்படும் அப்பம் ''பாலப்பம்'' என்றும் அழைக்கப்படுகின்றது.
* [[தோசை]]: யாழ்ப்பாணத்துக் கிராமப் புறங்களிலே சுடப்படுகின்ற தோசை சிறிது வேறுபட்டது. தோசை மாவுக்குச் சிறிது மஞ்சள் சேர்த்துக் [[கடுகு]], மிளகாயும் தாளித்துச் சேர்ப்பார்கள். தமிழ் நாட்டில் உள்ளது போல் நீர்த் தன்மை கொண்ட ''சட்னி'' யாழ்ப்பாணத்தில் செய்யப்படுவதில்லை. ஆனால் தோசைக்காக வேறு வகையான ''சம்பல்'' யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படுகின்றது. செத்தல் [[மிளகாய்|மிளகாயைப்]] (காய்ந்த மிளகாய்) பொரித்து, அத்துடன், [[புளி]], [[உப்பு]], [[வெங்காயம்]], தேங்காய்ப்பூ சேர்த்து [[உரல்|உரலில்]] இட்டு இடித்துக்கொள்வார்கள். இது சிறிது வரண்டதாகவும், உதிர்கின்ற தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
* அவித்த கிழங்கு வகைகள்: மரவள்ளிக்கிழங்கு[[மரவள்ளிக் கிழங்கு]] யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்க அளவில் செய்கை பண்ணப்படும் கிழங்கு வகையாகும். கறியாகவும் சமைத்து உண்னப்படும் இக் கிழங்கை அவித்துக் காலை உணவாக உண்பது உண்டு. இக் கிழங்கு குறைந்த வருமான மட்டங்களில் உள்ளவர்களுக்கு மலிவாகக் கிடைக்ககூடிய ஒரு உணவாகும்.
* [[பாண்]] (கோதுமை ரொட்டி): இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட, மேனாட்டு உணவு வகையான இது, யாழ்ப்பாணத்தவரால் பரவலாக உண்ணப்படுகின்ற உணவு வகைகளில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. உண்ணுவதற்கான தயார் நிலையிலேயே வருவதாலும், அரச [[மானியம்|மானியங்கள்]] மூலமாகப் பாண் மலிவான விலையில் கிடைப்பதாலும் பலரும் இதை விரும்பி உண்கிறார்கள்.
 
===பனம் பண்டங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணத்து_உணவுப்_பழக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது