"பெருவிழுங்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,541 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
[[கிளையுரு உயிரணு]]க்கள் போலவே, நோயெதிர்ப்பு செயல்முறையை தொடங்கி வைப்பதற்காக, [[பிறபொருளெதிரியாக்கி]]யை முன்வைக்கும் அல்லது அறிமுகப்படுத்தும் தொழிலைச் செய்யும். ஒரு நோய்க்காரணியை விழுங்கி அழித்த பின்னர், நோய் எதிர்ப்பாற்றல் முறைமையால் அடையாளம் காணப்படக் கூடிய, நோய்க்காரணியின் மேற்பரப்பில் இருக்கும் ஒரு புரதத்தை, தனது கலமென்சவ்வில் இணைத்து T உதவி உயிரணுக்களுக்கு அறிமுகப்படுத்தும். இதனால் குறிப்பிட்ட பிறபொருளெதிரியாக்கிக்கு எதிரான, [[பிறபொருளெதிரி]] உருவாக்கப்படும். நிணநீர்க்கணுவில் உள்ள B உயிரணுக்களும் இதில் உதவும்.<br />
<br />
[[பூஞ்சை]]கள், [[ஒட்டுண்ணி வாழ்வு|ஒட்டுண்ணிகள்]] போன்றவற்றின் தொற்றுக்கு உட்படும் கலங்கள், [[கட்டி]]களிலும் நோயெதிர்ப்பைக் காட்டும். ஒரு T கலமானது தனக்குரிய பிறபொருளெதிரியாக்கியை பெருவிழுங்கியில் கண்டு கொண்டதும், செயல்திறன் உடையதாக்கப்பட்டு, பெருவிழுங்கியை தூண்டி, தீவிரமானதாக்கும். இவ்வாறு தூண்டப்பட்ட பெருவிழுங்கிகள் விழுங்கும் தொழிலை உடனடியாக்ச் செய்யும்.<ref name= New>{{cite journal |last= |first= |authorlink= |coauthors= |date=March 1988|title= The human immune system: The lymphocyte story |journal= New Scientist|volume= |issue=1605 |pages=1 |id= |url=http://www.newscientist.com/channel/health/hiv/mg11716050.100 |accessdate= 2007-09-13 |quote= }}</ref>. குறிப்பிட்ட ஒரு பிறபொருளெதிரியாக்கிக்கு எதிரான தொழிற்பாடு பெருவிழுங்கிகளில் காணப்படுவதில்லை. ஆனால் தான் செயல்திறனைப் பெற்ற இடத்திலுள்ள கலங்களை அழிக்கும்.<ref name= New/>.
===தசை புத்துயிர்ப்பு/ மீளமைப்பு===
.
பெருவிழுங்கிகளால் வெளியேற்றப்படும் கரையக்கூடிய சில பதார்த்தங்கள், தசையின் இழையப் பெருக்கத்திற்கும், வேறுபாட்டிற்கும், வளர்ச்சிக்கும், திருத்தங்களுக்கும், இவற்றின் மூலம் புத்துயிர்ப்புக்கும் உதவும். ஆனால் இந்த புத்துயிர்ப்பை அளிக்கும் பதார்த்தம் எதுவென அறியப்படவில்லை.<ref name="Schiaffino S, Partridge T 2008 380">{{cite book |author= Schiaffino S, Partridge T |title=Skeletal Muscle Repair and Regeneration |series=Advances in Muscle Research |volume=3 |pages=380 |year=2008)}}</ref>. தசை திருத்தங்களை மேற்கொள்ளும் பெருவிழுங்கிகள், அத்தகைய தொழிலுக்காக பிரத்தியாகமானவை அல்ல. காயங்கள் ஏற்படும்போது, இந்த பெருவிழுங்கிகள் பல வகையான [[இழையம்|இழையங்களிலும்]] காணப்படும்.
 
==மேற்கோள்கள்==
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/764829" இருந்து மீள்விக்கப்பட்டது