ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சே
வரிசை 25:
 
ஐநா பொதுச்செயலாளருக்கு [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[நியூ யார்க் நகரம்|நியூ யார்க் நகரின்]] [[மன்ஹாட்டன்]] பகுதியில் உள்ள சட்டனில் ஐந்து தள வீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நகர வீட்டை 1921ஆம் ஆண்டு ஆன் மோர்கனுக்காக கட்டப்பட்டது; 1972ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளுக்காக நன்கொடையாக அளிக்கப் பட்டது.<ref>Teltsch, Kathleen. [http://select.nytimes.com/gst/abstract.html?res=F10D1FF8345A137B93C7A8178CD85F468785F9 "Town House Offered to U. N."], ''[[The New York Times]]'', 15 July 1972. Accessed 27 December 2007.</ref>
 
==பதவிக்காலமும் தேர்வும் ==
[[Image:Dag Hammarskjold.jpg|thumb|240px|left| 1953ஆம் ஆண்டிலிருந்து 1961ஆம் ஆண்டில் அவரது மறைவு வரை [[ டாக் ஹமாஷெல்ட்]] மிகவும் துடிப்பான ஐநா பொதுச் செயலாளராக விளங்கினார். [[சூயஸ் கால்வாய்]] பிரச்சினையின்போதும் 1960 ஆண்டில் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தால்]] அமெரிக்க ஒற்றுப்படை விமானம் பிடிக்கப்பட்ட நிகழ்வின்போதும் நெறியாளராகப் பங்காற்றினார். கனடிய வெளியுறவு அமைச்சர் லெஸ்டர் பி. பியர்சன் முன்மொழிந்தபடி [[ஐக்கிய நாடுகள் நெருக்கடிப் படை|முதல் ஐநா அமைதிகாப்புப் படையினையும்]] நிறுவினார்.]]
 
பொதுச் செயலாளர்களுக்கு பதவிக்காலம் ஐந்தாண்டு காலமாக இருப்பினும் இது காலவரையின்றி நீடிக்கப்படலாம். இருப்பினும் எந்தவொரு பொதுச்செயலரும் இருமுறைக்கு மேலாக பதவியில் நீடித்திருக்கவில்லை. <ref>[http://www.un.org/sg/appointment.shtml Secretary-General Appointment Process]</ref> [[ஐக்கிய நாடுகள் பட்டயம்]] பொதுச் செயலாளரை[[ ஐக்கிய நாடுகள் பொதுச் சபை|பொதுச் சபையால்]] [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை|பாதுகாப்பு அவையின்]] பரிந்துரைப்படி நியமிக்கப்பட வேண்டும் என வரையறுத்துள்ளது. இதனால் இத்தேர்வு பாதுகாப்பு அவையின் எந்தவொரு ஐந்து நிரந்தர உறுப்பினர்களின் வெட்டுரிமைக்கு உட்பட்டது.
ஐநா பட்டயத்தின் சுருக்கமான இந்தத் தேர்வுமுறை நடைமுறையில் பிற செய்முறை விதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கங்களாலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நடைமுறையில் பொதுச்செயலாளர் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் நாட்டினராக இருக்க முடியாது; ஏற்றுக்கொள்ளப்பட்ட வழமையாக அடுத்தடுத்த செயலர்கள் தேர்வுக்கு மண்டல ( கண்டவாரியான) சுழல்முறை கடைபிடிக்கப்படுகிறது. போட்டியாளர்கள் [[ஆங்கிலம்|ஆங்கிலத்திலும்]] [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சிலும்]] பேசும் திறமையும் அலுவல்முறைசாரா தகுதியாக கருதப்படுகிறது.
 
மேற்கத்திய நாடுகளின் கூடுதல் எண்ணிக்கையாலும் ஒருநாட்டிற்கு ஒரு வாக்கு என்ற முறைமையாலும் பொதுச்செயலாளர்களாக மேற்கு நாடுகளுக்கு சாதகமானவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் 1960களில் சோவியத் அதிபர் [[நிக்கிட்டா குருசேவ்]] இந்தப் பதவியை அழித்திட முயன்றார். இதற்கு மாற்றாக மூவர் அடங்கிய தலைமை அவையை பரிந்துரைத்தார்;ஒருவர் மேற்கு நாடுகளிலிருந்தும் ஒருவர் இடதுசாரி கிழக்கு நாடுகளிலிருந்தும் ஏனையவர் [[கூட்டுசேரா இயக்கம்|கூட்டு சேரா]] நாடுகளிலிருந்தும் தேர்வு செய்யப்படலாம். சோவியத்துகளின் இந்த தீர்மானத்தை நடுநிலை நாடுகள் ஆதரிக்க தவறியதால் இது நிறைவேற்றப்படவில்லை. <ref name="Krushchev">{{cite press release|title=[[Nikita Krushchev]], Address to the [[UN General Assembly]]|publisher=[[Fordham University]]|date=23 September 1960|url=http://www.fordham.edu/halsall/mod/1960khrushchev-un1.html|accessdate=2 May 2011}}</ref><ref name="bbc">{{cite news|url=http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/september/29/newsid_3087000/3087171.stm|title=[[BBC News|BBC On This Day]] 1960: Khrushchev anger erupts at UN|date=23 September 1960|work=[[BBC Online]]|publisher=[[BBC News]]|language=[[English language|English]]|accessdate=2 May 2011|location=[[United Kingdom]]}}</ref>
 
==மேற்கோள்கள்==