மலாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 96:
 
1511ல் அல்பான்சோ டி அல்புகர்க் எனும் போர்த்துகீசியக் கடலோடி மலாக்காப் பேரரசைக் கைப்பற்றினார். அப்போது மலாக்காவை சுல்தான் முகமது ஷா என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவர் ஜொகூரில் உள்ள ரியாவ் தீவுகளுக்குத் தப்பித்துச் சென்றார். அங்கே அவர் ஒரு புதிய அரசைத் தோற்றுவித்தார். அதன் பின்னர் போர்த்துகீசியர்கள் மலாக்காவை ஒரு நூற்றாண்டு காலம் ஆட்சி செய்தனர்.
 
மலாக்கா வாழ் மக்களைக் கிறிஸ்துவச் சமயத்திற்கு கொண்டு வர போர்த்துகீசியர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டனர். ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இஸ்லாமியச் சமயத்தில் இருந்து அவர்களைத் திசை திருப்ப முடியவில்லை. இஸ்லாமியச் சமயம் நன்றாக வேரூன்றி இருந்தது. அதனால் தங்கள் கவனத்தை வியாபாரத்தில் செலுத்தினர். மலாக்கா மக்களின் உள் விவகாரங்களிலும் போர்த்துகீசியர்கள் அதிகமாகத் தலையிடவும் இல்லை.
"https://ta.wikipedia.org/wiki/மலாயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது