மலாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
==வரலாறு==
 
மலாயாவின் வரலாறு 200,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தொடங்குகிறது. மலேசியாவின் பேராக் மாநிலத்தில் லெங்கோங் எனும் ஊர் இருக்கிறது. 1938 ஆம் ஆண்டில் அங்கே ஒரு மனித எலும்புக் கூட்டைக் கண்டுபிடித்தனர். அதற்கு [[பேராக்]] மனிதனின் எலும்புக் கூடு என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

===கி.மு.11,000===

அந்த எலும்புக் கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது. 8,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக் கூடும் அதே இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது.
 
===கி.மு.4,000===
 
பேராக் மாநிலத்தில் தம்பூன் எனும் மற்றோர் ஊர் இருக்கிறது. இந்த ஊர் [[ஈப்போ]] மாநகருக்கு மிக அருகாமையில் இருக்கிறது. இங்கே ஒரு பழமை வாய்ந்த குகை உள்ளது. இந்தக் குகையில் 4000 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப் பட்ட பழமையான ஓவியங்களையும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
வரி 44 ⟶ 50:
[[இந்தோனேசியா]], மேலனேசியா, [[ஆஸ்திரேலியா]] போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த மனித இனம், மலாயாவை தங்கிச் செல்லும் ஓர் உறைவிடமாகப் பயன் படுத்தி உள்ளனர். தொல்பொருள் ஆய்வுகளில் இருந்து அந்த உண்மை தெரிய வருகின்றது.
 
===கற்காலம் கி.மு.2,000===
 
மலாயாவில் முதன்முதலில் குடியேறியவர்களுக்கும் பாப்புவா நியூகினி பூர்வீகக் குடிமக்களுக்கும் பல உடல் ஒற்றுமைகள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அந்த முதல் ஆதிவாசிகள் குகைகளில் வாழ்ந்தனர். கற்களால் ஆயுதங்களைச் செய்தனர். இவர்கள் கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் தென் மேற்குச் சீனாவில் இருந்து வந்து மலாயாவில் குடியேறியவர்கள்.
வரி 50 ⟶ 56:
இவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். வளர்ப்பு பிராணிகளும் இவர்களிடம் இருந்துள்ளன. இவர்கள் மண்பாண்டங்கள் தயாரிப்பதிலும் ஆடை ஆபரணங்கள் தயாரிப்பதிலும் சிறந்து விளங்கி இருக்கின்றனர். குகைகளில் ஓவியங்கள் வரைவதிலும் தங்கள் திறமைகளைக் காட்டியுள்ளனர்.
 
===வெண்கலக் காலம் கி.மு.200===
 
கி.மு. 250 ஆம் ஆண்டில் வெண்கலக் காலக் கலாசாரங்கள் மலாயாவில் துளிர் விட்டுள்ளன. இந்தக் கலாசாரத்தை டோங் சோன் கலாசாரம் என்று அழைக்கின்றனர். இஃது இந்தோனேசியாவின் சுமத்திராவில் இருந்தும் இந்தோசீனாவில் இருந்தும் வந்தவை.
 
===இருப்புக் காலம் கி.பி.200-கி.பி.300===
 
கி.பி. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் வந்தது இந்த இருப்புக் காலம். இரும்பு காலம் என்பதைத் தான் இருப்புக் காலம் என்கிறோம். ஜொகூர் மாநிலத்தில் உள்ள கோத்தா திங்கி எனும் இடத்தில் [[ரோமாபுரி]] யில் இருந்து கொண்டு வரப் பட்ட பாசி மணிகள் கண்டு எடுக்கப் பட்டன. அந்தக் காலக் கட்டங்களில் ரோமாபுரியில் இருந்து வணிகர்கள் மலாயாவுக்கு வாணிகம் செய்ய வந்துள்ளனர். பலர் அங்கேயே குடியேறியும் இருக்கிறார்கள்.
 
===கி.பி.400-கி.பி.1200===
 
கெடா எனப் படும் கடாரத்தில் 4 - 12 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியர்கள் குடியேறினர். பேராக் மாநிலத்தில் கோலா செலின்சிங் எனும் இடத்தில் இந்தியர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், தங்க ஆபரணங்கள், கண்ணாடி மணிகள், சிப்பி ஆபரணங்கள் போன்றவை கண்டு எடுக்கப் பட்டுள்ளன.
 
===மலாய் ஆட்சியாளர்கள்===
 
மலாக்கா நீரிணைக்கு அப்பால் இருக்கும் சுமத்திராவில் இருந்து வந்த மலாய் ஆட்சியாளர்களின் ஆளுமை மலாயாவில் வேர் ஊன்றியுள்ளது. பலேம்பாங்கில் மிகவும் சக்தி வாய்ந்த மலாய் அரசு இருந்து இருக்கிறது. கி,பி.600 ஆம் ஆண்டு சீன வரலாற்று ஆவணங்களில் அதற்கான சான்றுகள் உள்ளன. இந்தியர்களின் ஆதிக்கம் படைத்த புத்த மத அரசாங்கம் அங்கே காணப் படுகிறது.
வரி 65 ⟶ 74:
அதற்கு ஸ்ரீவிஜயா அரசு என்று பெயரும் உள்ளது. [[ஸ்ரீவிஜயா அரசு]] மலாயாவின் லங்காசுகா, கெடா, கிளந்தான், திரங்கானு, பகாங் போன்ற இடங்களை ஆட்சி செய்தும் உள்ளது. 1200 ஆண்டுகளில் மினாங்கபாவ் எனும் சுமத்திரா மலாய் அரசு மலாயாவில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆட்சி செய்து உள்ளது. இவர்கள் மலாயாவினுள் இஸ்லாம் சமயத்தைக் கொண்டு வந்தனர்.
 
===மஜாபாகித் இந்து அரசு===
 
பலேம்பாங்கைச் சார்ந்த ஓர் அரசப் பரம்பரையினர் கி,பி.1200 -1300 ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் ஒரு தனி அரசாங்கத்தை உருவாக்கி அதற்கு துமாசிக் என்றும் பெயர் சூட்டினர். ஏறக்குறைய நூறு ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அந்த அரசாங்கத்தை 1360ல் [[மஜாபாகித்]] எனும் இந்து அரசு தாக்கி ஆட்சியாளர்களைப் பூண்ட்டொடு அழித்தது.
"https://ta.wikipedia.org/wiki/மலாயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது