பெத்லகேம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "பாலஸ்தீனம்" (using HotCat)
சி தானியங்கிஇணைப்பு: kl:Bethlehem; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 32:
 
 
== வரலாற்றில் பெத்லகேம் ==
 
[[விவிலியம்|விவிலியத்தின்]] முதல் பகுதியாகிய [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] பெத்லகேம் ''தாவீதின் நகர்'' என்று அழைக்கப்படுகிறது. [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாடோ]] பெத்லகேம் நகரில் [[இயேசு|இயேசு கிறித்து]] பிறந்தார் என்னும் செய்தியைத் தருகிறது (காண்க: [[மத்தேயு|மத்தேயு நற்செய்தி]], மற்றும் [[லூக்கா|லூக்கா நற்செய்தி]]). கிறித்தவ சமூகங்களில் மிகப் பழமையான ஒரு குழுவினர் இந்நகரில் 20 நூற்றாண்டுகளாக வாழ்ந்துவந்துள்ளனர். அண்மைக் காலத்தில் புலம்பெயர்தலின் விளைவாகக் கிறித்தவர்களின் எண்ணிக்கை பெத்லகேமில் மிகவும் குறைந்துவிட்டது.
வரிசை 41:
 
பெத்லகேமில் வாழ்கின்ற மக்களுள் பெரும்பான்மையோர் [[இசுலாம்]] சமயத்தவர். ஆனால், [[கிறித்தவம்|கிறித்தவர்களும்]] கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
[[Imageபடிமம்:Bethlehem-Manger-Square.jpg|thumb|right|உமர் மசூதி (1886). பெத்லகேம்.]]
[[Imageபடிமம்:Bethlehem4.jpg|thumb|left|பெத்லகேமில் வாழ்ந்த கிறித்தவப் பெண்கள். ஆண்டு: 1911.]]
இங்கு சுற்றுலாப் பயணியரும் திருப்பயணியரும் பெரும் எண்ணிக்கையில் வருகின்றனர். குறிப்பாக, [[இயேசு|கிறிஸ்து பிறப்பு விழாவின் போது]] திருப்பயணியர் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டும். அப்போது கிறித்தவர் [[இயேசு]] பிறந்த இடத்தின்மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள [[இயேசு பிறப்புக் கோவில்|இயேசு பிறப்புக் கோவிலை]] சந்திக்கவும் அங்கு இறைவேண்டல் செய்யவும் பெருந்திரளாகக் கூடுவர். பெத்லகேமில் முப்பதுக்கு மேற்பட்ட பயணியர் விடுதிகளும் 300க்கும் அதிகமான கைவேலைப் பொருள் விற்பனைக் கடைகளும் உள்ளன. பெத்லகேமின் வடக்கு நுழைவாயிலில் யூத இன மூதாட்டியும் யாக்கோபின் மனைவியுமான [[ராகேல்]] என்பவரின் கல்லறை உள்ளது. இது [[யூதர்|யூதர்களுக்குப்]] புனிதமான இடம் ஆகும்.
 
== விவிலியத்தில் பெத்லகேம் ==
 
[[Imageபடிமம்:Jesus birthplace in Bethlehem.jpg|thumb|right|பெத்லகேம் நகர். இயேசு கிறித்து பிறந்த இடம் பளிங்குத் தரையில் வெள்ளியாலான ஒரு விண்மீன் வடிவில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.]]
பெத்லகேம் பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பு கி.மு. 1400இல் காணக்கிடைக்கிறது. [[அமர்னா நிருபங்கள்|அமர்னா களிமண் சுவடிகள்]] என்று அழைக்கப்படும் ஏடுகளில் "அபிரு" மக்கள் தொந்தரவு கொடுத்ததால் "பித்-லாஹ்மி" ("Bit-Lahmi") என்னும் இடத்தைக் கைப்பற்றுவதற்கு [[எருசலேம்]] மன்னர் தம் மேல்நராக இருந்த [[எகிப்து]] மன்னரின் உதவியை நாடும் குறிப்பு உள்ளது. இங்கே "பித்-லாஹ்மி" என்பது பெத்லகேமைக் குறிப்பதாகும்.
 
வரிசை 64:
[[தாவீது]] மன்னர் பிறந்த இடம் பெத்லகேம் என்பது மரபு. அங்குதான் அவர் அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார் (காண்க: [[1 சாமுவேல் (நூல்)|1 சாமுவேல் 16:4-13]]). தாவீது ஒளிந்திருந்த அதுல்லாம் குகை பெத்லகேமுக்கு அருகில் இருந்தது (காண்க: [[1 சாமுவேல் (நூல்)|1 சாமுவேல் 22:1]]).
 
== பெத்லகேம்: இயேசு பிறந்த ஊர் ==
[[Imageபடிமம்:Bethlehem Christmas2.JPG|thumb|left|கிறித்து பிறப்பு விழாவின்போது பெத்லகேமில் நிகழ்ந்த திருப்பவனி. ஆண்டு 2006.]]
 
இயேசு பெத்லகேமில் பிறந்தார் என்று [[மத்தேயு]] மற்றும் [[லூக்கா]] ஆகிய இரு நற்செய்தியாளர்கள் பதிவுசெய்துள்ளனர். [[லூக்கா]] நற்செய்திப்படி இயேசுவின் பெற்றோராகிய [[மரியா (இயேசுவின் தாய்)|மரியாவும்]] [[யோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)|யோசேப்பும்]] நாசரேத்து என்னும் ஊரில் வாழ்ந்துவந்தனர். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்தபோது (இன்றைய கணிப்புப்படி, கி.பி. 6ஆம் ஆண்டு) தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான [[யோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)|யோசேப்பும்]] தம் மனைவி [[மரியா (இயேசுவின் தாய்)|மரியாவோடு]] பெயரைப் பதிவுசெய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். அங்கேதான் மரியா ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்து அவருக்கு [[இயேசு]] என்று பெயரிட்டார்.
வரிசை 75:
[[இயேசு]] உண்மையிலேயே பெத்லகேமில்தான் பிறந்தாரா என்பதை நிறுவ போதுமான வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் பெரும்பான்மையான விவிலிய அறிஞர்கள் பெத்லகேமே [[இயேசு|இயேசுவின்]] பிறப்பிடம் என்று நிறுவியுள்ளனர். இதற்கான சான்றுகள் [[மத்தேயு]], [[லூக்கா]] நற்செய்திகள் தவிர, வேறு பல பழங்காலக் கிறித்தவ எழுத்தாளர்களின் கூற்றுக்களிலிருந்தும் தெரிகின்றன.
 
== தமிழ் இலக்கியத்தில் பெத்லகேம் ==
 
[[வேதநாயகம் சாஸ்திரியார்]] என்னும் தமிழ்க் கிறித்தவப் புலவர் (1774-1864) '''பெத்லகேம் குறவஞ்சி''' என்னும் சிற்றிலக்கியம் படைத்து பெத்லகேமுக்குத் தமிழிலக்கியத்தில் அழியா இடத்தைப் பெற்றுத் தந்துள்ளார். இக்குறவஞ்சி இலக்கியம் நாடகப் பாங்கான கதை அமைப்புடையது. இதை இயற்றிய சாஸ்திரியார் தஞ்சை சரபோஜி மன்னரின் அவைப் புலவராக இருந்தார்.
வரிசை 97:
பின்னர் சிங்கனும் சிங்கியும் கடவுளைப் போற்றுகின்றனர். இறுதி வாழ்த்தோடு ''பெத்லகேம் குறவஞ்சி'' நிறைவு பெறுகிறது.<ref>[http://www.tamilvu.org/courses/diploma/a071/a0714/html/a07143l2.htm வேதநாயகம் சாஸ்திரியார் எழுதிய ''பெத்லகேம் குறவஞ்சி'']</ref>. இக்குறவஞ்சி வழியாக வேதநாயகம் சாஸ்திரியார் கிறித்தவ சமயக் கருத்துக்களை இலக்கிய நயத்தோடும், மக்கள் பண்பாட்டோடு இயைந்த விதத்திலும் எடுத்துக் கூறியுள்ளார்.
 
== மேலும் காண்க ==
* [[இயேசு பிறப்புக் கோவில்]]
 
== ஆதாரங்கள் ==
<references/>
{{விவிலிய இடங்கள்}}
 
[[பகுப்பு:விவிலிய இடங்கள்]]
[[பகுப்பு:பாலஸ்தீனம்]]
 
 
[[an:Betlem]]
வரிசை 145:
[[jv:Betlehem]]
[[ka:ბეით-ლაჰმი]]
[[kl:Bethlehem]]
[[kn:ಬೆಥ್‌ಲೆಹೆಮ್]]
[[ko:베들레헴]]
"https://ta.wikipedia.org/wiki/பெத்லகேம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது