அழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Abszess.jpg|thumb|250px|right|அழற்சியின் பண்புகளான வீக்கம் மற்றும் சிவத்தலைக் காட்டும் விதமாக தோலில் ஏற்பட்ட ஓர் சீழ்பிடித்த [[கட்டி]]. நடுவில் [[சீழ்]] பிடித்துள்ள பகுதியைச் சுற்றி கரும்வளையங்களாக [[இறந்த திசு]]க்கள்]]
 
'''அழற்சி''' (Inflammation, [[இலத்தீன்]], ''inflammare'') என்பது காயங்கள், தீப்புண்கள், அடிபட்ட இடங்களில் [[திசு]]க்களின் சேதம் மற்றும் இதர உயிரணுக்களின் வினையால் உடம்பில் நிகழும் எதிர்ப்பாற்றல் சார்ந்த செயலாகும். நோய்க்காரணிகள் தொற்றுவதால் அல்லது திசுதிசுக்கள் சேதமடைந்தால் அவ்விடத்தில் உள்ள உயிரணுக்களிலிருந்து [[புரதம்|புரதங்கள்]] மற்றும் எதிர்ப்பாற்றலூக்கிகள் வெளிப்படும். இது தன்னிச்சையாக தொடங்கி அவசரக்காலத்தில் வேலை செய்வது போல் உடம்பில் நோயெதிர்ப்புக் காரணிகளான [[இரத்த வெள்ளையணு]]க்கள், அவ்விடத்தில் சீக்கிரமாக குவிய ஆயத்தமாக்கும். அவ்வாறு குவியும்போது [[இரத்தம்|இரத்தத்தில்]] வழக்கமாக உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை விட, தேவையைப் பொறுத்து வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். இவ்வாறு ஊக்குவிக்கும் போது அவ்விடத்தில் இரத்த நுண்குழாய் மூலம் குவியும் உயிரணுக்களான வெள்ளையணுக்கள், (இரத்தத்தில் உள்ள உயிரணுக்களில் மிகவும் பெரியவை) திசுக்களின் அடர்த்தி, இரத்தக்குழல்களின் விரிப்பு ஆகியவற்றையும் சேர்த்து இயங்கச்செய்யும். அதுவே நமக்கு வீக்கமாக காட்சியளிக்கும். இதில் தசை சிவப்படைதல், எரிச்சல், வலி மற்றும் சூடு அதிகரித்தல் ஆகியன இணைந்து நிகழும். இவ்வாறு ஏற்படும் நோயெதிர்ப்பு செயலே அழற்சி என அழைக்கப்படுகிறது.
 
இவ்வாறு குவியும் வெள்ளையணுக்களை நாம் காயமறியவுடன்காயமாறியவுடன் வெளிப்படும் வெள்ளைநிற சீழ்களின் வடிவில் காணமுடியும். இது ஆங்கிலத்தில் லீசன்சு என அறியப்படுகிறது. இவ்வாறு வெளிப்படும் சீழ்களில் [[நிணநீர் செல்கள்|நிணநீரும்]] மிகுந்திருக்கும்.
 
[[நோய்க்காரணி]]கள் போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய காரணிகள், அழிபட்டஅடிப்பட்ட அல்லது பாதிப்புக்குள்ளான [[உயிரணு]]க்கள், தீங்கு விளைவிக்கும் தூண்டுகைகள் மற்றும் எரிச்சல் தரக்கூடியப் பொருள்களுக்கு [[தமனி]] (அல்லது நாடி), [[சிரை]] (அல்லது நாளம்) ஆகிய இரத்தக்குழாய்களில் நிகழும் ஒரு சிக்கலான உயிரியல் எதிர்வினையாகும்.<ref name="pmid17223962">{{cite journal |author=Ferrero-Miliani L, Nielsen OH, Andersen PS, Girardin SE |title=Chronic inflammation: importance of NOD2 and NALP3 in interleukin-1beta generation |journal=Clin. Exp. Immunol. |volume=147 |issue=2 |pages=227–35 |year=2007 |month=February |pmid=17223962 |pmc=1810472 |doi=10.1111/j.1365-2249.2006.03261.x |url=}}</ref> இந்த எதிர்வினை தனக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய தூண்டுகையை நீக்கவும் பாதிக்கப்பட்ட திசுக்கள் குணமடைதலை துவக்கவும் உயிரினங்கள் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கை ஆகும். அழற்சியும் [[நோய்த்தொற்று]]ம் (infection) ஒன்றல்ல. பல நேரங்களில் நோய்த்தொற்றினால் அழற்சி ஏற்படலாம். நோய்தொற்று ஒரு புறவழிப் பெருக்க [[நுண்ணுயிர்|நுண்ணுயிரினால்]] ஏற்படுவது; அழற்சி அந்த நோய்க்காரணிக்கு எதிராக உடலானது மேற்கொள்ளும் எதிர்வினை.
 
அழற்சி என்ற எதிர்வினை இல்லாதிருக்குமேயானால் ஓர் உயிரியின் புண்களும் [[தொற்றுநோய்]]களும் குணமடையாது திசுக்கள் உயிர்வாழ்வதையே பாதிக்கும். ஆனால், நீண்டநாள் அழற்சி பல நோய்களுக்கு வித்தாக அமைகிறது. தும்மல் சுரம், தமனித் தடிப்பு, [[முடக்குவாதம்]] (Rheumatic arthritis) போன்றன நீடித்த அழற்சியால் உண்டாவன. ஆகவே உடல் தன்னிடத்தே காண்கின்ற அழற்சியை விரைவில் சரிப்படுத்த விழைகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது