விக்கிப்பீடியா பேச்சு:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப்பெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு குறித்து ஆங்கில விக்கியில் ஒரு திட்டம் முன்வரைவு
வரிசை 221:
*Tornonto என்பது டொரான்ட்டோ என்று எழுதினால், முதல் எழுத்து வல்லின எழுத்தாகையால் வலித்து To என்று ஒலித்தல் வேண்டும். தமிழில் டகரமும், ரகரமும், றகரமும் ஒரு சொல்லின் முதல் ஒலியாக வரலாகாது. ஆனால், இங்கே உள்ளது வேற்றுமொழிச்சொல். மேலும் ரகரம் நுனிநா வருடுவதால் எழுவது, எனவே To என்பதற்கு பயன்படுத்துவது தவறு. இதனை தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நான் தவறு என்பது, தொல்காப்பிய அடிப்படையிலும், பெருவாரியான தமிழர்கள் புரிந்துகொண்டதின் அடிப்படையிலுமே சொல்லுகிறேன்.
*செ.வை.சண்முகம் அவர்கள் கருத்தை மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது அது சரியானதாக எனக்கு படவில்லை. அவர் கூறவந்ததை, இந்த சிறிய மேற்கோள்வழி நான் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்.--[[பயனர்:C.R.Selvakumar|C.R.Selvakumar]] 20:48, 8 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா
 
== எழுத்துப்பெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு குறித்து ஆங்கில விக்கியில் ஒரு திட்டம் முன்வரைவு ==
 
வடக்கன் என்ற அரவிந்த் ஆங்கில விக்கியில் தமிழ் மொழி பற்றிய கட்டுரை உருவாக்கத்தில் மிகக் கூடுதலான பங்களிப்புச் செய்தவர். தமிழ் மொழி, தமிழர் வரலாறு ஆகியவற்றைப் பற்றி நன்கு படித்திருக்கிறார். அவர் ஆங்கிலத்தில் தமிழ் சொற்களை எப்படி எழுத்துப்பெயர்ப்பு/ஒலிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஒரு திட்டம் தீட்ட எண்ணியுள்ளார். அதன் [[:en:User talk:Vadakkan/Karpalakai/Transliteration|முன்வரைவைப்]] படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை அதன் பேச்சுப் பக்கத்தில் இடவும். -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 06:44, 26 அக்டோபர் 2006 (UTC)
Return to the project page "எழுத்துப்பெயர்ப்புக் கையேடு".