இறையனார் அகப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
==உரை==
உரை தோன்றிய வரலாறாக இந்த நூலின் உரையில் ஒரு கதை உள்ளது. பாண்டியன் வேண்டுகோளுக்கு இணங்கி இந்தூலுக்குப் பலர் உரை கண்டனர். அவற்றை [[உருத்திரசன்மன்]] என்பவனிடம் ஒவ்வொருவராகச் சொன்னார்கள். முருகக் கடவுள் ஒரு சாபத்தால் உப்பூரிக்குடி கிழாருக்கு ஊமை-மகனாகப் பிறந்திருந்தானாம். உரை கேட்டபோது ஐந்து வயது உடையவனாக விளங்கினானாம். அவன் பலரது உரையைக் கேட்டபோது அசைவற்றுக் கிடந்தானாம். [[மருதன் இளநாகனார்|மதுரை மருதனிளநாகனார்]] உரையைக் கேட்கும்போது ஆங்காங்கே வியந்து மெய்சிலிர்த்தானாம். [[இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை|கணக்காயனார் மகனார் நக்கீரனார் செய்த உரையைக்]] கேட்கும்போது எப்போதும் மெய்சிலிர்த்து வியந்தானாம்.
 
இந்த நக்கீரனார் சங்கப்பாடல்களைப் பாடிய [[நக்கீரர்]] அல்லர். இவரது உரையில் வடசொற்கள் மலிந்து காணப்படுகின்றன. எனினும், தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் முச்சங்க வரலாற்றைக் கூறும் முதல்-நூல் இந்த உரைநூலே. இவரது உரையில் அரிய பல விளக்கங்கள் காணப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/இறையனார்_அகப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது