இறையனார் அகப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
இந்த நூல் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியிருக்கலாம். இந்த நூலுக்கு உரை எழுதிய [[நக்கீரர்]] தமது உரைக்கு மேற்கோளாக [[பாண்டிக்கோவை]] நூலிலுள்ள பாடல்களைத் தந்துள்ளார். பாண்டிக்கோவை கி.பி. எட்டாம் நூற்றாண்டு நூல். கட்டளைக் கலித்துறை இலக்கணம் கொண்ட பாடல்கள் முதிலில் தோன்றிய காலம்.
==இறையனார் அகப்பொருள் சொல்லும் செய்திகள்==
தொல்காப்பியம் அகப்பொருள் இலக்கணத்தை அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என்னும் நான்கு இயல்களில் கூறுகிறது. இந்த 4 இயல்களில் 212 நூற்பாக்கள் உள்ளன. அந்த நூற்பாச் செய்திகளை இந்த நூல் 60 நூற்பாக்களில் சுருக்கமாகச் சொல்கிறது.
* செவிலியை இந்த நூல் 'கோடாய்' (பெற்றுக்கொள்ளும் தாய்) என்று குறிப்பிடுகிறது.<small> -நூற்பா 14</small>
* உள்ளத்திலோ, உரையிலோ, உடலிலோ உறவுக்களவு நிகழ்ந்த பின்னர்தான் கற்பு என்னும் மனைவாழ்க்கை நிகழும் <small>-நூற்பா 15</small>
 
==இறையனார் அகப்பொருள் நூலைப்பற்றி உரைநூல் சொல்லும் செய்திக்கதை==
அப்போது பாண்டிநாடு 12 ஆண்டு மழையின்றி வறண்டுபோயிற்று. பாண்டியன் சங்கப்புலவர்களை அழைத்து, இப்போது உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை. எங்காவது சென்று பிழைத்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டான். பின் நாடு செழித்தபின் பாண்டியன் புலவர்களை அழைத்துவரச் செய்தான். வந்தவர்களில் எழுத்து, சொல், யாப்பு இலக்கணத் துறையினர் மட்டும் இருந்தனர். இந்த இலக்கணங்கள் பொருளை அறிவதற்குத்தானே! பொருள் இலக்கணம் அறிந்தவர் இல்லையே! என்று அரசன் கவலைப்பட்டான். இந்தக் கவலையைப் போக்கச் சிவபெருமான் இந்த நூலின் 60 நூற்பாக்களை 3 செப்பேடுகளில் எழுதித் தன் இருக்கையில் வைத்தார். துப்புரவு செய்வோர் அதனை எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அதற்கு உரை எழுதச் செய்து பெற்றான்.
"https://ta.wikipedia.org/wiki/இறையனார்_அகப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது