கட்டளைக் கலித்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
எழுத்தெண்ணிப் பாடுகிற பொழுது [[ஒற்றெழுத்து]]கள் (புள்ளி வைத்த எழுத்துகள்) அனைத்தையும் விட்டுவிட்டு, உயிர் அல்லது [[உயிர்மெய் எழுத்துகள்|உயிர்மெய் எழுத்துகளை]] மட்டும் எண்ணி எழுதுவது வழக்கம். ஒரு (செய்யுள்) அடி [[நேரசை]]யில் தொடங்கினால் ஒற்று நீக்கி 16 எழுத்துகள் இருக்குமாறும், [[நிரையசை]] கொண்டு தொடங்கினால் ஒற்று நீக்கி 17 எழுத்துகள் இருக்குமாறும் பாடுவர். இதன்படி நான்கடிகள் உடைய ஒரு கலித்துறைச் செய்யுள் நேரசையில் தொடங்கினால் ஒரு செய்யுளில் மொத்தம் 64 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் அச்செய்யுளில் மொத்தம் 68 எழுத்துகளும் இருக்கும்.
 
ஒவ்வொரு அடியிலும் ஐந்து சீர்கள் இருக்கும். அவை [[செப்பலோசை]] கொண்டதாக இருக்கும். செப்பலோசை என்பது வெண்டளை கொண்ட சீர்ப்பிணைப்புகள். ஐந்து சீர்களில் இறுதியில் உள்ள சீர் 'விளங்காய்' வாய்பாடு கொண்டிருக்கும். ஏனைய நான்கில் 'விளங்காய்' வாய்பாட்டுச் சீர் வராது. மா, விளம், காய் வாய்பாட்டில் முடியும் சீர்கள் மட்டுமே வரும். பாடல் பொதுவாக 'ஏ' என்னும் எழுத்தில் முடிவது வழக்கம்.
{{வார்ப்புரு:இலக்கிய_வடிவங்கள்}}
[[பகுப்பு:யாப்பிலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/கட்டளைக்_கலித்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது