ஈன்றிக் வொன் இசுட்டீபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
 
 
தொடக்கத்தில் இசுட்டீபன் அஞ்சல் சேவைப் பணியாளராக இருந்த காலத்தில், செருமனி 17 பிரிவுகளாகப் பிரிந்து இருந்தது. இவற்றின் அஞ்சல் சேவைகள் தனித்தனியான கொள்கைகளைக் கொண்டிருந்ததோடு கட்டணங்களும் வெவ்வேறாக இருந்தன. முதலில், அஞ்சல்கள் அனுப்புவதை இலகுவாக்குவதற்காக, செருமனி முழுவதற்கும் ஒரே கட்டண விகிதத்தை அறிமுகப்படுத்துவதில் இவர் கவனம் செலுத்தினார். அஞ்சல் சேவையைத் தரப்படுத்துவதும், அனைத்துலக மட்டத்தில் ஒழுங்கமைப்பதும் இவரது இலக்குகளாக இருந்தன. இந்த முயற்சியில், செருமனியின் அஞ்சல், தொலைபேசிச் சேவைகளை ஒன்றிணைத்ததுடன், 1874ல், பேர்ண் நகரில் நடந்த [[பன்னாட்டு அஞ்சல் மாநாடு|பன்னாட்டு அஞ்சல் மாநாட்டை]] ஒழுங்கு செய்வதிலும் முன்னின்று உழைத்தார். இந்த மாநாட்டிலேயே [[அனைத்துலக அஞ்சல் ஒன்றியம்]] நிறுவப்பட்டது. 1865 ஆம் ஆண்டிலேயே, செருமனியில் தபால் அட்டையை அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் இவரது முன்மொழிவை இவர் 1870ல் அஞ்சல் சேவைகள் இயக்குனராகப் பதவியேற்ற பின்னரே நடைமுறைப்படுத்தினார். இதன் பின்னர் 1870 - 71 காலகட்டத்தில் இடம் பெற்ற பிரான்சு-பிரசியப் போர்க் காலத்தில், களத்தில் இருந்த படைப்பிரிவுகளிடையே தொடர்புகளுக்கான ஒரு வழியாக அஞ்சல் அட்டைகள் பரவலாகப் பயன்பட்டன. செருமனியில் தொலைபேசியை அறிமுகப் படுத்தியமைக்காகவும் இவரை மக்கள் நினைவுகூருகின்றனர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஈன்றிக்_வொன்_இசுட்டீபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது