அஞ்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
===மங்கோலியப் பேரரசு===
பேரரசர் [[கெங்கிசுக் கான்]] பேரரசு முழுதும் பரவிய தூதர்களையும், அஞ்சல் நிலையங்களையும் கொண்ட முறையொன்றை [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசில்]] உருவாக்கினார். [[குப்ளாய்க் கான்|குப்ளாய்க் கானின்]] கீழான [[யுவான் வம்சம்|யுவான் வம்ச]] ஆட்சியில் இந்த முறைமை [[சீனா]]வின் பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டது. இந்த நிலையங்கள் அரசாங்க அஞ்சல்களை அனுப்புவதும் வழங்குவதுமான வேலைகளை மட்டுமன்றி, பயணம் செய்யும் அரச அலுவலர்கள், படைத்துறையினர், வெளிநாட்டு விருந்தினர் முதலியோருக்கும் உதவியாக இருந்தன. வணிகத் தேவைகளுக்கும் இவை பேருதவியாக அமைந்தன. குப்பிளாய்க் கானின் ஆட்சிக் கால முடிவில் சீனாவில் மட்டும் 1400 அஞ்சல் நிலையங்கள் இருந்தன. இவற்றின் தேவைகளுக்காக 50,000 குதிரைகள், 1400 [[எருது]]கள், 6700 [[கோவேறுகழுதை]]கள், 400 வண்டிகள், 6000 [[தோணி]]கள், 200 க்கு மேற்பட்ட [[நாய்]]கள், 1150 [[செம்மறியாடு]]கள் என்பன இருந்தன.
 
==அஞ்சல் சேவை வளர்ச்சி==
[[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] 1840 ஆம் ஆண்டுக்கு முன் அஞ்சல் முறை செலவு கூடியதாகவும், சிக்கல் நிறைந்ததாகவும், ஊழல் மிகுந்ததாகவும் இருந்தது. கட்டணங்களை அனுப்புவர் அன்றிப் பெறுபவரே செலுத்தவேண்டி இருந்தது. கட்டணங்களும் கடிதங்களைக் கொண்டுசெல்ல வேண்டிய தூரம், கடிதங்களில் அடங்கியுள்ள தாள்களின் எண்ணிக்கை என்பவற்றைப் பொறுத்து வேறுபட்டன. சர். [[ரோலன்ட் ஹில்]] என்பவர் அறிமுகப் படுத்திய சீர் திருத்தங்கள் அஞ்சல் முறைமையில் இருந்த பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைந்ததுடன், அஞ்சல் முறைமையையே முற்றாக மாற்றியமைத்தது எனலாம். இவருடைய சீர்திருத்தங்கள் "[[பென்னி அஞ்சல்]]" என்னும் கருத்துருவை அடிப்படையாகக் கொண்டிருந்ததுடன், அஞ்சலுக்கு முன்னதாகவே கட்டணம் செலுத்தும் முறையையும் அறிமுகப்படுத்தியது. இச் சீர்திருத்தங்களின் அடிப்படையிலேயே அஞ்சல்தலை அச்சிடப்பட்ட கடித உறைகள், ஒட்டக்கூடிய அஞ்சல்தலைகள் என்பன அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் அனுப்புபவரே அஞ்சல் கட்டணத்தைச் செலுத்தும் வசதி உருவாக்கப்பட்டது. இச் சீர்திருத்தங்களே அஞ்சல்தலையின் கண்டுபிடிப்புக்கும் வழிகோலியது. "[[பென்னி பிளாக்]]" என அறியப்படும் முதல் தபால்தலையும் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.
 
[[பகுப்பு: அஞ்சல்]]
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது