அஞ்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
==அஞ்சல் சேவை வளர்ச்சி==
[[File:Penny black.jpg|thumb|100px175px|"பென்னி பிளாக்", உலகின் முதலாவது அஞ்சல்தலை, ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.]]
[[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] 1840 ஆம் ஆண்டுக்கு முன் அஞ்சல் முறை செலவு கூடியதாகவும், சிக்கல் நிறைந்ததாகவும், ஊழல் மிகுந்ததாகவும் இருந்தது. கட்டணங்களை அனுப்புவர் அன்றிப் பெறுபவரே செலுத்தவேண்டி இருந்தது. கட்டணங்களும் கடிதங்களைக் கொண்டுசெல்ல வேண்டிய தூரம், கடிதங்களில் அடங்கியுள்ள தாள்களின் எண்ணிக்கை என்பவற்றைப் பொறுத்து வேறுபட்டன. சர். [[ரோலண்ட் ஹில்]] என்பவர் அறிமுகப் படுத்திய சீர் திருத்தங்கள் அஞ்சல் முறைமையில் இருந்த பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைந்ததுடன், அஞ்சல் முறைமையையே முற்றாக மாற்றியமைத்தது எனலாம். இவருடைய சீர்திருத்தங்கள் "[[பென்னி அஞ்சல்]]" என்னும் கருத்துருவை அடிப்படையாகக் கொண்டிருந்ததுடன், அஞ்சலுக்கு முன்னதாகவே கட்டணம் செலுத்தும் முறையையும் அறிமுகப்படுத்தியது. இச் சீர்திருத்தங்களின் அடிப்படையிலேயே அஞ்சல்தலை அச்சிடப்பட்ட கடித உறைகள், ஒட்டக்கூடிய அஞ்சல்தலைகள் என்பன அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் அனுப்புபவரே அஞ்சல் கட்டணத்தைச் செலுத்தும் வசதி உருவாக்கப்பட்டது. இச் சீர்திருத்தங்களே அஞ்சல்தலையின் கண்டுபிடிப்புக்கும் வழிகோலியது. "[[பென்னி பிளாக்]]" என அறியப்படும் முதல் தபால்தலையும் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது. இங்கிருந்தே புதிய அஞ்சல் முறை உலகம் முழுவதும் பரவியது.
 
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது