நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 58:
=== அச்சு பின்வாங்கல் ===
[[படிமம்:Patton speaking with Lt. Col. Lyle Bernard, at Brolo, circa 1943.jpg|right|thumb|250px|மெஸ்சினா செல்லும் வழியில் தளபதி பெட்டன் (இடது)]]
ஜூலை இறுதி வாரத்திலேயே சிசிலி போர்த்தொடரில் தோல்வி உறுதி என்பது ஜெர்மானிய போர்த்தலைமையகத்துக்கு தெளிவாகி விட்டது. எனவே மெஸ்சினா துறைமுகம் வழியாக இத்தாலிக்கு தங்களது படைப்பிரிவுகளைக் காலி செய்ய திட்டங்களை வகுக்கத் தொடங்கினர். ஆனால் உடன் போரிட்டு வந்த இத்தாலியப் படைகளுக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரிவிக்க வில்லைதெரிவிக்கவில்லை. ஒரு வாரம் கழித்தே ஜெர்மானியர்களின் பின்வாங்கல் திட்டம் இத்தாலிய தளபதி குசோனிக்குத் தெரியவந்தது. ஜெர்மானியர்கள் காலி செய்துவிட்டால் தனது படைகளால் தனித்து சமாளிக்க முடியாதென்று குசோனி இத்தாலியப் போர்த் தலைமையகதுக்குதலைமையகதுக்குத் தெரிவித்து விட்டார். இதனால் இத்தாலியர்களும் சிசிலியிலிருந்து பின்வாங்க முடிவு செய்தனர்.
 
ஆகஸ்ட் இரண்டாம் வாரம் நேச நாட்டுப் படைகள் எட்னா அரண்நிலைகளை முழுவதுமாகக் கைப்பற்றி ஊடுருவி விட்டன. ஒவ்வொரு நாளும் சில கிலோமீட்டர்கள் முன்னேறின. சிசிலியின் வடகிழக்கு முனையில் அச்சுக்கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகள் சுருங்கி வந்தன. ஆகஸ்ட் 11ல் திட்டமிட்டபடி அச்சு காலி செய்தல் ஆரம்பமானது. அச்சுப் படைகள் படிப்படியாகப் பின்வாங்கின; ஒவ்வொரு நாளும் பகல் வேளையில் 5-15 கிமீ பின்வாங்கி, இரவு நேரத்தில் சில படைப்பிரிவுகள் இத்தாலிக்கு காலி செய்யப்பட்டன. இதனைத் தடுத்து எஞ்சியிருந்த படைப்பிரிவுகளை கடல்வழியாக சுற்றி வளைக்க நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட இரு முயற்சிகள் தோல்வியடைந்தன. காலிசெய்தல் நிகழ்ந்து கொண்டிருந்த [[மெஸ்சினா நீரிணை]] (இத்தாலிக்கும் சிசிலிக்கு இடைப்பட்ட கடற்பகுதி) பலமான அச்சு பீரங்கிப் படைப்பிரிவுகளால் பாதுகாக்கப்பட்டிருந்தது. இதனால் நேச நாட்டு வான்படை வானூர்திகளும், கடற்படைக் கப்பல்களும் இக்காலி செய்தலைத் தடுக்க இயலவில்லை. ஆகஸ்ட் 17ம் தேதி இக்காலி செய்தல் முடிவடைந்தது. சுமார் 60,000 ஜெர்மானிய வீரர்களும் 75,000 இத்தாலிய வீரர்களும் நேச நாட்டுப் பிடியிலிருந்து தப்பி விட்டனர். அன்றே மெஸ்சினாத் துறைமுகத்தை நேச நாட்டுப் படைகள் கைப்பற்றின; சிசிலியப் படையெடுப்பு முற்றுப்பெற்றது.