"பூசை (இந்து)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

104 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''பூசை''' என்பது இந்து சமய வழிபாட்டு முறைகளில் மிகப் பிரபலமான ஒன்றாகும். பொதுவாக தெய்வத் திருவுருவங்களை பக்தி உணர்வுடன் வழிபடுதலே பூசை அல்லது பூசனை என்று கூறப்படுகிறது. அதோடு, குருமார்கள், மகான்கள், போற்றுதலுக்குரிய பெரியோர்கள், முன்னோர்கள், பெற்றோர் ஆகியோரை வழிபாட்டுணர்வுடன் தொழுவதும் பூசை என்பதில் அடங்கும் (உதாரணமாக, பல தமிழ்ச் சமூகங்களில் திருமணத்தின் போது மாப்பிள்ளையும், பெண்ணும் தங்கள் பெற்றோர்களுக்குப் பாதபூசை செய்யும் சடங்கு இடம்பெறுகிறது. சிவனடியார்களான நாயன்மார்கள் பூவுலகில் இருந்து மறைந்த நாட்களை குருபூசை நாட்கள் என்று சைவர்கள் குறிப்பிடுவர்).
 
கடவுள் நம்பிக்கையுள்ள இந்துக்கள் வீடுகள்வீடுகளில் பூசையறை என்று ஒரு தனியறை உண்டு. அங்கு தெய்வங்களின் படங்களும், விக்கிரகங்களும் இடம் பெறும். தினந்தோறும் இல்லத்தலைவி பூசையறையில் விளக்கேற்றுவார். குடும்ப உறுப்பினர்கள் தனியாகவோ, சேர்ந்தமர்ந்தோ தங்கள் வசதிக்கேற்ற படி பூசைகள் செய்வார்கள். இவைஇந்தவகைப் பூசைகள் பொதுவாக, எளிதானவைஎளிய முறையில் அமைந்திருக்கும்.
 
கோயில்களில் நடைபெறும் பூசைகள் மிக விரிவானவை. சைவ, வைணவப் பெருங்கோவில்களில் தினந்தோறும் ஆறு காலம் பூசைகள் நடைபெறும். இந்தப் பூசை முறைகள் பற்றி சைவ/வைணவ ஆகம நூல்கள் மிகவும் விரிவாகக் கூறுகின்றன. அம்மன் கோயில்கள் மற்றும் கிராம தேவதை கோயில்களில் அந்தந்த ஊர் மரபுப் படியோ அல்லது தாந்திரீக முறைகளின் அடிப்படையிலோ பூசைகள் நடைபெறும். அர்ச்சகர், சிவாசாரியார், குருக்கள், பட்டாசாரியார், பூசாரி, பூசகர் ஆகியவை திருக்கோயில்களில் பூசை செய்வோர்களுக்கு வழங்கும் பெயர்களாகும்.
15

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/778495" இருந்து மீள்விக்கப்பட்டது