பூசை (இந்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
கடவுள் நம்பிக்கையுள்ள இந்துக்கள் வீடுகளில் பூசையறை என்று ஒரு தனியறை உண்டு. அங்கு தெய்வங்களின் படங்களும், விக்கிரகங்களும் இடம் பெறும். தினந்தோறும் இல்லத்தலைவி பூசையறையில் விளக்கேற்றுவார். குடும்ப உறுப்பினர்கள் தனியாகவோ, சேர்ந்தமர்ந்தோ தங்கள் வசதிக்கேற்ற படி பூசைகள் செய்வார்கள். இந்தவகைப் பூசைகள் பொதுவாக எளிய முறையில் அமைந்திருக்கும்.
 
கோயில்களில் நடைபெறும் பூசைகள் மிக விரிவானவை. சைவ, வைணவப் பெருங்கோவில்களில் தினந்தோறும் ஆறு காலம் பூசைகள் நடைபெறும். இந்தப் பூசை முறைகள் பற்றி சைவ/வைணவ ஆகம[[ஆகமம்|ஆகமங்கள்]] நூல்கள் மிகவும் விரிவாகக் கூறுகின்றன. அம்மன் கோயில்கள் மற்றும் கிராம தேவதை கோயில்களில் அந்தந்த ஊர் மரபுப் படியோ அல்லது தாந்திரீக முறைகளின் அடிப்படையிலோ பூசைகள் நடைபெறும். அர்ச்சகர், சிவாசாரியார், குருக்கள், பட்டாசாரியார், பூசாரி, பூசகர் ஆகியவை திருக்கோயில்களில் பூசை செய்வோர்களுக்கு வழங்கும் பெயர்களாகும்.
 
அத்துடன், திருமணம், பெயர்சூட்டல், புதுமனை புகுதல், காதணி விழா போன்ற பல்வேறு மங்கலகரமான இந்துச் சடங்குகளிலும் பூசை ஒரு முக்கியப் பகுதியாக இடம் பெறும்.
 
பூசை என்ற சொல்லுக்கு இறையன்பில் மலர்தல் என்பது பொருள். பக்தர்கள் தாங்கள் வழிபடும் விக்கிரகங்களில் தெய்வத்தின் உயிர்ச்சக்தி இருப்பதாகக் கொண்டு பல்வேறு உபசாரங்களைச் செய்வார்கள். பொதுவாக, பூஜையில் பதினாறு வகை உபசாரங்கள் செய்யப் படவேண்டும் என்று [[ஆகமம்|ஆகம நூல்கள்]] குறிப்பிடுகின்றன.
 
* தியானம் - பூசைக்குரிய இறைவன் அல்லது இறைவியின் உருவத்தை தியானித்தல்
வரிசை 35:
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே <br />
 
என்று [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்தர்]] தேவாரமும்,
 
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் <br />
வரிசை 42:
நாமம் என் நாவில் மறந்தறியேன் <br />
 
என்று [[திருநாவுக்கரசு நாயனார்|திருநாவுக்கரசர்]] தேவாரமும்
 
பூசை பற்றிக் குறிப்பிடுகின்றன. எனவே தமிழகத்தில் [[பக்தி இலக்கியம்|பக்தி இலக்கிய]] காலகட்டத்தில் பூசை மிகப் பிரபலமானதொரு வழிபாட்டு முறையாக இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.
 
மேற்கூறியவை அனைத்தும் உள்ளிருக்கும் இறைவனைப் புறவயமாக நிறுத்திப் புரியும் பூசைகளாம். தத்துவ நிலையில், தெய்வத்தை உள்ளத்தின் உள்ளேயே கண்டு அகவயமாகவே வழிபடுதலும் இந்து மரபில் ஏற்றுக் கொள்ளப் பட்ட பூசை முறையாகும். இவ்வகைப் பூசை முழுக்க மனதளவிலேயே நிகழ்வது, இதற்கு விக்கிரகங்களோ, மலர்கள் போன்ற பூசைப் பொருட்களோ தேவையில்லை. தியான வகையிலான இந்தப் பூசை மானச பூசை என்று வழங்கப் பெறுகிறது.
வரிசை 51:
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே <br />
 
என்று [[தாயுமானவர்]] இவ்வகைப் பூசையினைச் சுட்டுவதைக் காணலாம்.
 
மரபு வழக்கப் படி தமிழகத்தின் ஆகம முறையிலான பெருங்கோயில்களில் குறிப்பிட்ட அர்ச்சக சாதியைச் சார்ந்தவர்கள் மட்டுமே பூசை செய்ய முடியும் என்பது வழங்கி வருகிறது. அண்மையில் தமிழ்நாடு அரசு, இந்து மதத்தைச் சேர்ந்த அனைவரும் பூசை முறைகளைக் கற்றுக் கொண்டு இக்கோயில்களில் அர்ச்சகர்களாக ஆக முடியும் என்று சட்டம் இயற்றியுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பூசை_(இந்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது