"சேந்தனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,195 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
==திருப்பல்லாண்டு பாடுதல்==
ஒருசமயம் சேந்தனார் சிதம்பரத்தில் இருக்கும்பொழுது மார்கழித் திருவாதிரைத் திருவிழாவின் போது நடராசப்பெருமான் எழுந்தருளி வரும் திருத்தேர் ஓடாது தடைப்பட்டு நின்றிருந்தது. அப்போது "சேந்தா தேர் நடக்கப் பல்லாண்டு பாடுக" என்று ஓர் அசரீரி கேட்டது. அது கேட்ட சேந்தனார் இறையவன் திருவருளால் "மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள்" எனத் தொடங்கும் திருப்பல்லாண்டு பாடி, வடம்பிடிக்காமல் தேர் தானே ஓடி இருப்பிடம் வந்து சேரச் செய்தார். இவ்வற்புதத்தை கண்ட அனைவரும் சேந்தனாரின் பத்தியை பேற்றினார்கள.
 
==வாழ்ந்த காலம்==
கண்டராதித்த சோழ மன்னரின் (கி.பி. 947-957) ஆட்சிக் காலத்தில் தோன்றிய கல்வெட்டில், `கலி விசயன் தருணேந்து சேகரன்` என்ற தொடர்கள் காணப்படுகின்றன. `தருணேந்து சேகரன்` என்ற தொடர் சேந்தனார் பாடிய இரண்டாம் பதிகத்து மூன்றாம் பாடலில் உள்ளது. ஆகவே சேந்தனார் கண்டராதித்த சோழரின் காலத்துக்கு முற்பட்டவராதல் வேண்டும். பட்டினத்து அடிகளின் கணக்கர் என்பதால் இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியும், பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும் எனலாம்.
 
[[பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள்]]
483

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/778582" இருந்து மீள்விக்கப்பட்டது