பூசை (இந்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Alfred Ford (Ambarisha Das) puja ISKCON Tirupati 2007.JPG|right|200px]]
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}}
'''பூசை''' என்பது இந்து சமய வழிபாட்டு முறைகளில் மிகப் பிரபலமான ஒன்றாகும். பொதுவாக தெய்வத் திருவுருவங்களை பக்தி உணர்வுடன் வழிபடுதலே பூசை அல்லது பூசனை என்று கூறப்படுகிறது. அதோடு, குருமார்கள், மகான்கள், போற்றுதலுக்குரிய பெரியோர்கள், முன்னோர்கள், பெற்றோர் ஆகியோரை வழிபாட்டுணர்வுடன் தொழுவதும் பூசை என்பதில் அடங்கும் (உதாரணமாக, பல தமிழ்ச்இந்துச் சமூகங்களில் திருமணத்தின் போது மாப்பிள்ளையும், பெண்ணும் தங்கள் பெற்றோர்களுக்குப் பாதபூசை செய்யும் சடங்கு இடம்பெறுகிறது. சிவனடியார்களான நாயன்மார்கள் பூவுலகில் இருந்து மறைந்த நாட்களை குருபூசை நாட்கள் என்று சைவர்கள் குறிப்பிடுவர்).
 
கடவுள் நம்பிக்கையுள்ள இந்துக்கள் வீடுகளில் பூசையறை என்று ஒரு தனியறை உண்டு. அங்கு தெய்வங்களின் படங்களும், விக்கிரகங்களும் இடம் பெறும். தினந்தோறும் இல்லத்தலைவி பூசையறையில் விளக்கேற்றுவார். குடும்ப உறுப்பினர்கள் தனியாகவோ, சேர்ந்தமர்ந்தோ தங்கள் வசதிக்கேற்ற படி பூசைகள் செய்வார்கள். இந்தவகைப் பூசைகள் பொதுவாக எளிய முறையில் அமைந்திருக்கும்.
 
கோயில்களில் நடைபெறும் பூசைகள் மிக விரிவானவை. சைவ, வைணவப் பெருங்கோவில்களில் தினந்தோறும் ஆறு காலம் பூசைகள் நடைபெறும். இந்தப் பூசை முறைகள் பற்றி சைவ/வைணவ [[ஆகமம்|ஆகமங்கள்]] நூல்கள் மிகவும் விரிவாகக் கூறுகின்றன. அம்மன் கோயில்கள் மற்றும் கிராம தேவதை கோயில்களில் அந்தந்த ஊர் மரபுப் படியோ அல்லது தாந்திரீக முறைகளின் அடிப்படையிலோ பூசைகள் நடைபெறும். அர்ச்சகர், சிவாசாரியார், குருக்கள், பட்டாசாரியார், பூசாரி, பூசகர் ஆகியவை திருக்கோயில்களில் பூசை செய்வோர்களுக்கு வழங்கும் பெயர்களாகும். தீவர இந்து மரபுக் கொள்கையின் படி பூசையை பிராமண சாதியை சார்ந்தவர்கள் மட்டுமே பண்ண முடியும். எனினும் தற்கால தமிழ்நாடு சட்டப்படி பூசைச் சடங்கை அறிதவர்கள் யாரும் பூசை செய்யலாம்.
 
அத்துடன், திருமணம், பெயர்சூட்டல், புதுமனை புகுதல், காதணி விழா போன்ற பல்வேறு மங்கலகரமான இந்துச் சடங்குகளிலும் பூசை ஒரு முக்கியப் பகுதியாக இடம் பெறும்.
"https://ta.wikipedia.org/wiki/பூசை_(இந்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது