"யாழ்ப்பாண வைபவமாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  16 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''யாழ்ப்பாண வைபவமாலை''' என்பது [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும். 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[மயில்வாகனப் புலவர் (வைபவமாலை ஆசிரியர்)|மயில்வாகனப் புலவர்]] என்பவரால், அக்காலத்திலிருந்த ஒல்லாந்த அதிகாரியொருவரின் வேண்டுகோளுக்கிணங்க இது எழுதப்பட்டதாக, இந்நூலிலுள்ள [[சிறப்புப் பாயிரம்|சிறப்புப் பாயிர]]ச் செய்யுளொன்றினால் அறியப்படுகிறது.
 
[[கைலாயமாலைகைலாய மாலை]], [[வையாபாடல்]], பரராசசேகரன் உலா மற்றும் இராசமுறை போன்ற நூல்களை முதல் நூல்களாகக் கொண்டே வைபவமாலையை இயற்றினாரென்று மேற்படி செய்யுளில் புலவர் எடுத்துக் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தையாண்ட [[ஆரியச் சக்கரவர்த்திகள்]] கால வரலாறுபற்றிக் கூடிய அளவு தகவல்களைக் கொண்டுள்ள தற்போது கிடைக்கக்கூடிய நூல் இதுவேயாகும். எனினும் மேற்படி காலப்பகுதியின் இறுதியின் பின் 150 தொடக்கம் 200 ஆண்டுகள் வரை கழிந்த பின்னரே இந் நூல் எழுதப்பட்ட காரணத்தால், பல்வேறு நிகழ்வுகளின் காலங்கள் தொடர்பிலும், மேலும் பல விடயங்களிலும், பிழைகளும், குழப்பங்களும் நேர்ந்துள்ளதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனினும் யாழ்ப்பாண வரலாறு தொடர்பில் இந் நூலின் பெறுமதியைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
 
இந் நூல் ஆரம்பத்தில் [[இராமாயணம்|இராமாயண]]த்திலிருந்து, இராம இராவண யுத்தத்தின்பின் ஏற்பட்ட விபீஷணன் ஆட்சியைத்தொட்டுப் பின் [[மஹாவம்சம்|மஹாவம்ச]]த்திலிருந்து, வட இந்தியாவிலிருந்து வந்த விஜய ராஜனின் கதையையும், அவன் பின் அரியணையேறிய அவன் தம்பியின் மகனாகிய பண்டுவாசனதும் கதைகூறிப் பின் அவன் வம்சத்தில் வந்த ஒருவனிடமிருந்து தென்னிந்தியப் பாணன் ஒருவன் பரிசாகப்பெற்ற மணற்றிடர் என்ற இடம் யாழ்ப்பாணமான கதைகூறி யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தொடங்குகிறது. [[இலங்கை]]யின் மேற்குக்கரையிலுள்ள [[திருக்கேதீஸ்வரம்|திருக்கேதீஸ்வரத்தின்]] புனரமைப்பு, கிழக்குக்கரையிலுள்ள [[திருக்கோணேஸ்வரம்]], தெற்கிலுள்ள சந்திரசேகரன் கோயில் மற்றும் வடகரையிலுள்ள திருத் தம்பலேஸ்வரம் என்பவற்றை விஜய ராஜனின் திருப்பணிகளாக இந்நூல் கூறுகிறது. பின்னர் யாழ்பாடியின் வரவுக்கு முன்னரே [[வன்னியர்]]களின் குடியேற்றம் பற்றியும் பேசப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/7802" இருந்து மீள்விக்கப்பட்டது