முள்ளந்தண்டு நிரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎அமைப்பு: *விரிவாக்கம்*
வரிசை 3:
==மனித முள்ளந்தண்டு நிரல்==
===அமைப்பு===
[[மனிதர்|மனிதர்கள்]] பிறக்கும்போது 33 முள்ளந்தண்டு எலும்புகளைக் கொண்டிருந்தாலும், உடல் விருத்தியின்போது, நிரலின் சில பகுதிகளில் உள்ள எலும்புகள் இணைந்து கொள்வதனால், வளர்ந்தவர்களில் தனித்தனியாக இருக்கும் எலும்புகளின் எண்ணிக்கை 24 ஆக இருக்கும். இவை அமைந்திருக்கும் இடத்திற்கேற்ப வேறுபட்ட பெயர்களைக் கொண்டிருக்கும். அவையாவன:
*'''கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்''' - ஏழு உள்ளன. இவை C1 - C7 எனப் பெயரிடப்படுகின்றன. இவற்றில் முதலாவது எலும்பு அத்திலசு முள்ளந்தண்டெலும்பு என்றும், இரண்டாவது அச்சு முள்ளந்தண்டெலும்பு என்றும் அழைக்கப்படுகின்றன. அத்திலசு முள்ளெலும்பானது, அச்சு முள்ளெலும்பில் இலகுவாக அசையக் கூடிய விதத்தில் அமைந்திருப்பதனால், [[கழுத்து|கழுத்தானது]] இலகுவாக அசையக் கூடிய விதத்தில் அமைந்திருக்கும்.
*'''நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள்''' - 12 எலும்புகள் உள்ளன. இவை T1 - T12 எனப் பெயரிடப்படுகின்றன. இவை [[விலா எலும்பு]]கள் பொருந்தி இருக்கும் எலும்புகளாகும். இவை நெஞ்சுக்கூட்டை அமைப்பதில் பங்கு வகிக்கின்றது.
*
*'''நாரி முள்ளந்தெண்டெலும்புகள்''' - நாரிப் பகுதியில் அமைந்துள்ள L1 - L5 எனப் பெயரிடப்பட்டிருக்கும் எலும்புகளாகும். இவை உடல்நிறையை தாங்கி நிற்கும் எலும்புகளாகும்.
*
*'''திருவெலும்பு''' - நாரி எலும்புகளைத் தொடர்ந்து அமைந்திருக்கும் ஐந்து எலும்புகள் விருத்தியின்போது முள்ளெலும்பிடை கசியிழையத் தகடுகளை இழந்து இணைவதனால், ஒரு எலும்பாக தோற்றமளிக்கும்.
*
*'''குயிலலகெலும்பு''' - முள்ளந்தண்டு நிரலின் இறுதியிலுள்ள மூன்று எலும்புகளும் இணைந்து காணப்படும். இது வாலெலும்பு எனவும் அழைக்கப்படும்.
*
===தொழில்கள்===
*[[முள்ளந்தண்டு வடம்]], ஏனைய சில உள் [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களுக்கு]] பாதுகாப்பளிக்கும்.
*[[இணைப்பிழையம்]] (ligament), [[தசைநாண்]]கள் (tendons), [[தசை]] போன்ற இழையங்கள் இணைந்துகொள்ள ஆதாரமான இடமாக இருக்கும்.
*உடலின் பல பாகங்களுக்கும் அமைப்பிற்குரிய ஆதாரமாக இருக்கும். [[தலை]], [[தோள்]]கள், [[நெஞ்சு]]ப்பகுதிக்கு ஆதாரத்தை வழங்குவதுடன், உடலின் மேல், கீழ்ப் பகுதிகளை இணைத்திருக்கும். இதன்மூலம், உடல் நிறையத் தாங்க்வதுடன், உடல் சமநிலையைப் பேணுவதிலும் உதவும்.
*உடல் அசைவுக்கும், உடலின் நெகிழ்வுத்தன்மைக்கும் உதவும்.
 
[[als:Wirbelsäule]]
"https://ta.wikipedia.org/wiki/முள்ளந்தண்டு_நிரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது