காரைநகர் சிவன் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 7:
 
==கோயில் அமைப்பு==
இங்குள்ள ஐயனார் பூரணை, புட்கலை சூழ அமர்ந்துள்ளார். சிவனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஐயனாருக்கும் அளிக்கப்படுகின்றது. சிவனுக்குக் கோபுரம், சித்திரத்தேர் உள்ளது போல ஐயனாருக்கும் தனியே கோபுரம், சித்திரத்தேர் உள்ளன. கர்ப்பக்கிரகத்தில் எழுந்தருளியுள்ள [[சிவலிங்கம்|சிவலிங்க]] மூர்த்திக்குப் பரிவார தெய்வங்களாக அம்பாள், நடேசர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், [[விநாயகர்]], [[முருகன்|சுப்பிரமணியர்]], [[சண்டேஸ்வரர்]], சமயகுரவர் என்போர் எழுந்தருளியுள்ளனர்.
 
==விசேட உற்சவங்கள்==
இத்திருக்கோயிலில் நடைபெறும் உற்சவங்களில் மிகப் பிரசித்தி பெற்றது [[திருவெம்பாவை]] உற்சவமாகும். நடராஜர் இரதாரோகணமும் ஆர்த்திராபிஷேகமும் குறிப்பிடத்தக்கவை. அபிஷேகத்தன்று மாலையில் திருவூடல் நடைபெறும். [[பங்குனி உத்தரம்|பங்குனி உத்தரத்தில்]] நிறைவடையும் படி சிவபெருமான் திருவிழா பத்துத் தினங்களும் [[ஆடிப்பூரம்|ஆடிப்பூரத்தில்]] நிறைவடையும் படி அம்பாள் திருவிழா பத்துத் தினங்களும் நடைபெறுகின்றன. [[தைப்பூசம்]], [[மாசி மகம்]], [[ஆவணி சதுர்த்தி]], [[நவராத்திரி]], [[கார்த்திகைத் தீபம்]] என்பனவும் விசேடமாக இங்கு போற்றப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/காரைநகர்_சிவன்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது