இடுப்பு வளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
*பின் பக்கம், முதுகுப்புறமாக, முள்ளந்தண்டு நிரலின் வால்ப்பகுதியில் திருவெலும்பும் (sacrum), குயிலலகெலும்பும் (coccyx) (வாலெலும்பும்) காணப்படும்.
*இரு பக்கங்களிலும், முன்புறமாகவும் [[இடுப்பெலும்பு]]கள் (hip bones) அமைந்திருக்கும். இந்த எலும்பானது ஆரம்பத்தில், [[பூப்பு|பூப்படைவதற்கு]] முன்னர் புடைதாங்கி (ilium), நாரியம் (ischium), பூப்பென்பு (pubic bone) என்ற மூன்று எலும்புகளால் ஆக்கப்பட்டிருக்கும். பின்னர் முதிர்ச்சியடைகையில் மூன்றும் இணைந்து ஒரு தனியெலும்பாக மாற்றமடையும்.
இரு பக்கங்களிலுமுள்ள இடுப்பெலும்புகள் இரண்டும் முன்புறமாக ஒரு [[கசியிழையம்|கசியிழையத்துடன்]] ஒட்டிக் காணப்படும். இடுப்பெலும்பின் ஒட்டும்பகுதி பூப்பென்புப் பகுதியாக இருப்பதனால் இந்தக் கசியிழையம் [[பூப்பென்பொட்டு]] (Pubic symphysis) என அழைக்கப்படுகின்றது. இடுப்பெலும்புகள் பின் புறமாகவும் திருவெலும்புடன் இணைந்திருப்பதனால், இந்த எலும்புகள் அனைத்தும் இணைந்து ஒரு முழுமையான வளையத்தை (Pelviv ring) உருவாக்கும். இதனால் இடுப்புப் பகுதியில் ஒரு வாயகன்ற, ஆழமற்ற கொள்கலன் (பாத்திரம்) வடிவில் இந்த இடுப்புப்பகுதி அமைந்திருக்கும். இங்கு ஏற்படும் குழி இடுப்புக்குழி எனப்படும்.
 
==இடுப்புக்குழி==
"https://ta.wikipedia.org/wiki/இடுப்பு_வளையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது