யூ.எசு. ஓப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: my:ယူအက်စ် အိုးပင်း
No edit summary
வரிசை 16:
}}
 
'''அமெரிக்க டென்னிசுத் திறந்த போட்டிகள்''' அல்லது '''யூ. எசு. ஓப்பன்''' (யூ. எஸ். ஓப்பன், ''US Open''), ஆண்டுதோறும் நடைபெறுகின்ற, "கிராண்ட் சிலாம்" (Grand Slam) என்றழைக்கப்பட்ட, [[பெருவெற்றித் தொடர் (டென்னிசு)|பெருவெற்றித் தொடர்]] [[டென்னிசு]] போட்டிகளில் ஒன்றாகும். 1881ஆம் ஆண்டு, முதலில் ஆண்கள் ஒற்றையர் போட்டியுடன் துவங்கிய, யூ.எசு.தேசிய சாதனையாளர் போட்டியின் தற்கால வடிவமே, இப்போட்டியாகையால் உலகின் மிகப் பழமையான டென்னிசுப் போட்டியாகக் கருதப்படுகிறது. 1987ஆம் ஆண்டிலிருந்து, பெருவெற்றித் தொடர் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் இப்போட்டி, ஆண்டில் கடைசியிலும் நான்காவதாகவும் நடைபெறும் சாதனைப்போட்டியாக விளங்குகிறது. [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரில்]] [[குயீன்சு]] பகுதியில் அமைந்த [[பில்லி சீன் கிங்]] (Billie Jean King) தேசிய டென்னிசு மையத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிற இப் பந்தய விளையாட்டில் குறைந்தது 600 ஆண்களும் பெண்களும் போட்டியிடுகின்றனர். [[ஆகஸ்ட்|ஆகத்து]] இறுதியிலும் [[செப்டம்பர்]] துவக்கத்திலும் இரண்டு வாரங்களில் நடைபெறும் இப்போட்டிகள் ஒற்றையர் (ஆண்), இரட்டையர் (ஆண்கள்), ஒற்றையர் (பெண்), இரட்டையர் (பெண்) , மற்றும் இருபாலர் இரட்டையர் பிரிவுகளில் நடைபெறுகின்றன. தொழில்நெறியர்களும் (professional), தனியார்வநெறியர்களும் (அமெச்சூர்களும்) கலந்துகொள்ள முடியுமாதலால் இது "திறந்த போட்டிகள்" என வழங்கப்படுகிறது.
 
நான்கு பெருவெற்றித் தொடர் டென்னிசு போட்டிகளில், இங்கு மட்டுமே கடைசி ஆட்டத்தொகுப்பில் சமநிலைமுறிவுத் தீர்வு (final-set tiebreaks) கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/யூ.எசு._ஓப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது