நினைவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 1:
'''நினைவி''' அல்லது '''நினைவிக்கருவி''' (Mnemonic) எனப்படுவது [[கல்வி|கற்கும்]] விடயங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளப் பயன்படுத்தப்படும் ஒரு கற்றல் உத்தியாகும். இவை வாய்மொழியாகவோ, எழுத்து வடிவிலோ, பார்க்கக்கூடிய படங்களாகவோ, கேட்கக்கூடிய ஒலி வடிவிலோ அமைந்திருக்கலாம். நினைவில் கொள்ள கடினமான சில [[தகவல்]]களை, குறிப்பாக [[பட்டியல்]]களை இலகுவில் நினைவில் நிறுத்திக் கொள்ள இந்த கற்றல் உத்தி உதவும். [[மனிதர்|மனித]] [[மனம்|மனமானது]] எழுந்தமானமான விடயங்களை நினைவில் கொள்வதைவிட அறிந்த, பழகிய, நகைச்சுவையான, தனக்குரிய, பாலியல்சார்ந்த, இடம்சார்ந்த விடயங்களையும் அர்த்தமுள்ள செய்திகளையும் மிக இலகுவாக நினைவில் கொள்ளக் கூடிய ஆற்றல் உள்ளமையால் இந்த கற்றல் உத்தி பயன்படுகின்றது.<br />
<br />
நினைவாற்றல் எனப்படும்போது அது இரு வகைப்படும். ஒன்று இயற்கையான [[நினைவாற்றல்]], அடுத்தது செயற்கையான நினைவாற்றல். இதில் முதலாவது [[பிறப்பு|பிறக்கும்போதே]] ஒருவரிடம் இருக்கக்கூடிய நினைவாற்றல். இரண்டாவது வகையான செயற்கையான நினைவாற்றல் என்பது கற்றல், பயிற்சி செய்தல் போன்றவற்றால் சேர்த்துக் கொள்ளக்கூடிய நினைவாற்றல். எவருக்கும் இருக்கும் இயற்கையான நினைவாற்றல் மட்டும், அவரது அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளப் போதுமானதாக இருப்பதில்லை. எனவே செயற்கையான நினைவூட்டல் அவசியமாகின்றது. இத்தகைய தேவையை இலகுவாக நிறைவேற்ற 'நினைவி' பயன்படும். <br />
<br />
[[முதலெழுத்துப் புதிர்]] என்பது மிகவும் பொதுவாகப் பயன்படும் ஒரு நினைவியாகும். இதன்மூலம் ஒரு பட்டியலிலுள்ள விடயங்களை நினைவில் கொள்ள, அவற்றின் முதலெழுத்து அல்லது முதலெழுத்துக்கள், அல்லது முதல் சொல் பயன்படும்.
"https://ta.wikipedia.org/wiki/நினைவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது