தமிழ்ப் பிராமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
"தாமிழி என்பது பண்டை தமிழக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
தாமிழி என்பது பண்டை தமிழகத்தில் இருந்த பண்டை தமிழ் மொழியின் வரி வடிவமாகும். கி.மு.300ல் எழுதப்பெற்றதெனக் கொள்ளப்பெறும். ”சமவயங்க சுத்த” என்னும் சமண நூலில் பதினெட்டு வகையான எழுத்துகள் குறிக்கப் பெற்றுள்ளன. அதில் பம்பி, தாமிழி என்ற எழுத்துகள் காணப்படுகின்றன. பம்பி என்பது பிராமி எழுத்தைக் குறிக்கும் பிராகிருதச் சொல் என்றும், தாமிழி என்பது தமிழைக் குறிக்கும் பிராகிருதச் சொல் என்றும் கொள்ளப்படுகிறது. அந்த பிராமி எழுத்தில் அசோகன் கல்வெட்டுகள் உள்ளன என்றும் தாமிழி எழுத்தில் தமிழ்நாட்டில் உள்ள பண்டைய கல்வெட்டுகள் எழுதப்பெற்றுள்ளன என்றும் வழங்கப்படுகின்றன. இன்று தமிழ் மொழியில் உள்ள பழைய கல்வெட்டுகளில் உள்ள வரி வடிவத்தை தமிழ்-பிராமி என்று குறிப்பிடுவது வழக்கத்தில் உள்ளது.
[[Image:Tamil brahmi.png|thumb|250px|தமிழ்ப் பிராமி எழுத்துக்கள்]]
 
'''தமிழ்ப் பிராமி''' என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப்பயன்பட்ட எழுத்து முறைமை. இது தமிழி எனவும் அழைக்கப்படுகிறது. தமிழின் முன்னைய எழுத்து வடிவங்களாக இரண்டு குறிப்பிடப்படுகின்றன. அவை:
 
# தமிழி.
#வட்டெழுத்து.
 
கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சமவயங்க சுத்தா, பன்னவயன சுத்தா ஆகிய சமண நூல்கள் 18 வகை எழுத்துக்க்ளைக் குறிப்பிடுகின்றன. அவற்றில் தமிழியும் ஒன்று.<ref>T.V.Mahalingam, Early South Indian Palaeography, page 110-111, 1974 Second Edition</ref> [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்|ஆதிச்சநல்லூரில்]] தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் கொண்ட பொருட்கள் கண்டறியப் பட்டுள்ளன. தமிழ்ப் பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடியில் எழுதுவதற்கேற்ப அவை வட்டெழுத்துக்களாக பின்னர் உருமாறின
 
சிரோண்மனி மற்றும் [[ஐராவதம் மகாதேவன்]] போன்ற தொல்லியல் அறிஞர்கள், தமிழ் பிராமியிலிருந்தே [[பிராமி|அசோகன் பிராமி]] தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டுள்ளனர்.
 
==அசோகனின் பிராமிக்கு தமிழ் பிராமிக்கு உள்ள வேறுபாடுகள்==
 
அசோகன் பிராமியைப் போல் தமிழ் பிராமியில் கூட்டெழுத்துக்கள் கிடையாது. 'அ'கரத்தை நீக்குவதற்காக புள்ளி பயன்படுத்தப்பட்டது. மேலும் அசோகன் பிராமியில் காணப்படாத தமிழுக்கே உரிய நான்கு எழுத்துக்கள் தமிழில் பிராமியில் உள்ளன. அவை ற,ன,ள,ழ ஆகும். இந்நான்கு எழுத்துக்களும் அசோகன் பிராமியையும் தமிழ் பிராமியையும் வேறு படுத்த உதவுகின்றன. தாய்லாந்தில் உள்ள பிராமி எழுத்துக்களையும் எகிப்து பிராமி எழுத்துக்களை தமிழ் பிராமி என இனங்கண்டது 'ற' என்ற தமிழ் ஒலிக்கான பிராமி எழுத்தே ஆகும்.
 
==தமிழ்ப் பிராமியில் 'தமிழ்' என்ற சொல்==
 
[[படிமம்:tamilbrahmi.jpg|center]]
 
 
==தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்==
* [[எகிப்து|எகிப்தில்]] உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப் பட்டது.<ref>{{cite news | first=| last=| coauthors= | title= Tamil Brahmi script in Egypt| date=Nov 21, 2007 | publisher=The Hindu | url =http://www.hinduonnet.com/2007/11/21/stories/2007112158412400.htm | work =| pages =| accessdate = 2007-12-06 | language = ஆங்கிலம்}}</ref>
* ஆதிச்சநல்லூரில் இரும்புக்காலத்தைச் சேர்ந்த தாழி கண்டுபிடிப்பு<ref>{{cite news | first= Subramanian| last=T.S. | coauthors= | title= `Rudimentary Tamil-Brahmi script' unearthed at Adichanallur| date=Feb 17, 2005 | publisher=The Hindu | url =http://www.hinduonnet.com/2005/02/17/stories/2005021704471300.htm | work =| pages =| accessdate = 2007-12-06 | language = ஆங்கிலம்}}</ref>
* [[தாய்லாந்து]] நாட்டில் தமிழ்ப்பிராமி எழுத்துக்களுடன் பானை.<ref>{{cite news | first=| last=| coauthors= | title= Tamil-Brahmi inscription on pottery found in Thailand| date=Jul 16, 2006 | publisher=The Hindu | url =http://www.hindu.com/2006/07/16/stories/2006071603952000.htm | work =| pages =| accessdate = 2007-12-06 | language = ஆங்கிலம்}}</ref>
 
* [[மாங்குளம் கல்வெட்டு]]
* [[எடக்கல் கல்வெட்டு]]
* [[புகழூர்க் கல்வெட்டு]]
* [[ஜம்பைக் கல்வெட்டு]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
* [http://thatstamil.oneindia.in/visai/jun05/madhaian.html தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் சங்க இலக்கியங்களும், பேராசிரியர் பெ. மாதையன், பெரியார் பல்கலைக்கழகம்]
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:எழுத்து முறைமைகள்]]
[[பகுப்பு:தமிழ் கல்வெட்டுக்கள்]]
[[பகுப்பு:தமிழ் எழுத்துமுறை]]
 
[[en:Tamil-Brahmi]]
[[pl:Tamilskie pismo brahmi]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_பிராமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது