டி. ஆர். ராஜகுமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 24:
 
==திரைப்படத்துறையில்==
[[1939]] ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் [[குமார குலோத்துங்கன்]] படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ''மந்தாரவதி'', ''சூர்யபுத்ரி'' படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து [[கே. சுப்பிரமணியம்|கே. சுப்பிரமணிய]]த்தின் தயாரிப்பில் வெளிவந்த [[கச்ச தேவயானி]] படம் பெரு வெற்றி பெற்றது

[[File:TR Rajakumari Sivakavi 1943.jpg|left|thumb|200px|[[சிவகவி]] (1943) படத்தில் ராஜகுமாரி]]
ராஜகுமாரி பல புகழ் பெற்ற நடிகர்களுடன் நடித்தவர். [[பி. யு. சின்னப்பா]]வுடன் [[மனோன்மணி]] படத்திலும், [[தியாகராஜ பாகவதர்|பாகவதருடன்]] [[சிவகவி]], [[ஹரிதாஸ்]] படங்களிலும் நடித்தார். ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. ஜெமினியின் [[சந்திரலேகா]] படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. இதில் [[எம். கே. ராதா]]வுக்கு சோடியாக நடித்தார். அதில் இவர் ஆடிய ”ஜிப்சி” நடனம் மற்றும் உச்ச கட்ட காட்சியில் ஆடிய ”டிரம்ஸ்” நடனம் இவருக்கு இந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்தது. [[இந்தி]] சந்திரலேகாவிலும் நடித்தார்.
 
கலைஞர் [[மு. கருணாநிதி]]யின் வசனத்தில் உருவான [[மனோகரா]] படத்தில் வசந்த சேனையாக இவர் தோன்றி நடித்திருந்தார். எம். கே. தியாகராஜா பாகவதர், பி. யூ. சின்னப்பா, எம். கே. ராதா, [[டி. ஆர். மகாலிங்கம்]], [[எம். ஜி. ஆர்]], [[சிவாஜி கணேசன்]] என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றவர் ராஜகுமாரி. சென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரிலேயே சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய முதல் நடிகை இவர்தான்.
"https://ta.wikipedia.org/wiki/டி._ஆர்._ராஜகுமாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது