சௌமியமூர்த்தி தொண்டமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2:
'''சௌமியமூர்த்தி தொண்டமான்''' ([[ஆகஸ்டு 30]], [[1913]] - [[அக்டோபர் 30]], [[1999]]) இலங்கை வாழ் [[இந்தியத் தமிழர் (இலங்கை)|இந்தியத் தமிழர்களது]] முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார். 86 வது வயதில் இவர் இறக்கும் போது [[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்|இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின்]] தலைவராகவும் [[இலங்கை]] அரசின் அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் காணப்பட்டார். இவர் தொடர்ந்து 21 வருடங்கள் இலங்கை பாராளுமன்றில் அமைச்சராக பதவி வகித்தார்.
== ஆரம்ப வாழ்க்கை ==
தொண்டமானின் தந்தையார் இந்தியாவின் [[புதுக்கோட்டை]] பகுதியில் இருந்த அரச பரம்பரை வழி வந்தவராவார். இவர் ''முன்ன புத்தூர்'' என்ற கிராமத்தில் வசித்து வந்தார். எனினும் அவரது தந்தையின் காலத்தில் அவர்களது குடும்பம் ஏழ்மையில் வாடியது. இதனால் கருப்பையா இலங்கையில் [[கோப்பி]] தோட்டத்துக்கு வேலை செய்ய சென்றவர்களுடன் கூட, இலங்கை சென்று அங்கு வேலை செய்து செல்வம் சேர்த்தார். பின்னர் இந்தியா திரும்பிய அவர் தமது கிராமத்தில் சீதாம்மை என்பரை [[1903]] இல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு பிறந்த முதல் பெண் குழந்தை சிறிது காலத்தில் இறந்து போனது. மறுபடி இலங்கை திரும்பிய கருப்பையா இலங்கையில் [[நுவரெலியா]] மாவட்டத்தில் அமைந்துள்ள வெவண்டன் என்னும் தேயிலை தோட்டத்தை விலைக்கு வாங்கினார். ஒருவருடத்துக்கு பிறகு இந்தியா திரும்பிய கருப்பையாவுக்கு மூன்று பெண் குழந்தைகளுக்கு பிறகு ஐந்தாவது குழந்தையாக சௌமியமூர்த்தி [[1913]] [[அக்டோபர் 30]] இல் பிறந்தார்.
 
=== இலங்கை வருகை ===
வரிசை 14:
 
== அரசியல் பிரவேசம் ==
1930களின் ஆரம்ப காலப்பகுதியில் [[அட்டன், இலங்கை|அட்டன்]] நகரில் ''காந்தி சேவா சங்கம்'' என்ற சங்கமொன்று இயங்கி வந்தது. இராசலிங்கம், வெள்ளையன் போன்ற இளைஞர்கள் அதில் முக்கிய பங்காற்றி வந்தனர். காந்திய வழிச்சென்ற செல்வந்த வாலிபனான சௌமியமூர்த்தியை இவர்கள் அச்சங்கக் கூட்டம் ஒன்றுக்கு அழைத்தனர். சௌமியமூர்த்தி தனது தந்தைக்கு அரசியல் மீது இருந்த வெறுப்பு கரணமாககாரணமாக முதலில் பங்கு பற்ற மறுத்தாலும் பின்னர் அதில் பங்கேற்றார். மேலும் அப்போது நேதாஜி [[சுபாஷ் சந்திர போஸ்]] வழிசென்ற இயக்கமான போஸ் சங்க கூட்டங்களிலும் பங்கேற்றார். இவற்றில் சௌமியமூர்த்தி உரையாற்றத் தொடங்கினார்.
 
=== இலங்கை இந்திய காங்கிரஸ் ===
வரிசை 22:
 
=== தொழிற்சங்கத்தின் தோற்றம் ===
இலங்கையில் 1930களின் கடைசி பகுதியில் ஏற்பட்ட இந்திய எதிர்ப்பு அலைகள் காரணமாக அதிகளவான தோட்ட தொழிலாளர்கள் இலங்கை இந்திய காங்கிரசில் இணைந்தனர். இதனால் அவர்களது பிரச்சினைகளை பேச வேண்டிய தேவை இலங்கை இந்திய காங்கிரசுக்கு ஏற்பட்டது. ஆனால் இலங்கை இந்திய காங்கிரஸ் இந்திய தொழிலாளரது பிரச்சினைகளை தோட்ட நிர்வாகத்திடம் கொண்டு சென்ற போது அவர்கள் அரசியல் கட்சியுடன் பேச மறுத்தனர். மாறாக தொழிற்சங்கத்துடன் மட்டுமே பேச முடியுமென வாதிட்டனர். இதனால் 1940 [[மே]] மாதம் இலங்கை இந்திய காங்கிரசின் தொழிற்சங்க கிளை ஆம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப தலைவராக சௌமியமூர்த்தியும், செயளாலராக பம்பாய் பல்கலைக்கழகத்தின் வர்த்தக பட்டதாரியும், இடதுசாரி கருத்து கொண்டவரான [[ஏ. எம். ஏ. அஸீஸ்|ஏ. எம். ஏ. அஸீசும்]] தெரியப்பட்டனர். 1940 [[செப்டம்பர் 7]] - [[செப்டம்பர் 8|8]] இல் இலங்கை இந்திய காங்கிரசின் தொடக்க விழாவை தலைமை தாங்கி நடத்தினார். இந்நிகழ்வே இவரது வாழ்வின் முதலாவது பிரதான அரசியல் நிகழ்வாகும்.
 
=== இலங்கை இந்திய காங்கிரசின் தலைவர் ===
வரிசை 28:
 
=== முதலாவது தொழிற்சங்க போராட்டம் ===
1946 இல் [[கேகாலை]]யில் உள்ள தேயிலை தோட்டமொன்றான நவிஸ்மியர் தோட்டத்தில் இருந்த 360 தமிழ் தோட்ட தொழிளார்தொழிலாளார் குடும்பங்கள் அருகில் இருந்த சிங்கள கிராமத்தவருக்கு நிலம் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறி தோட்டத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அரசால் பணிக்கப்பட்டனர், அவர்களுக்கு வேலையும் மறுக்கபட்டதுமறுக்கப்பட்டது. தோட்ட தொழிளாலர்கள்தொழிலாளர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்தனர். தோட்ட நிர்வாகம் இக்குடும்பத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டது. உடனடியாக செயலில் இறங்கிய சௌமியமூர்த்தி தொண்டமான் சட்ட நடவடிக்கையில் இறங்கியதோடு, இலங்கை இந்திய காங்கிரசின் [[அட்டன், இலங்கை|அட்டன்]], [[இரத்தினபுரி]], [[யட்டியான்தொட்டையட்டியாந்தோட்டை]], [[கேகாலை]] பிரதேச தலைவர்களை அழைத்து அப்பிரதேச தேயிலை, இறப்பர், கோப்பி தோட்டங்களில் வேலை நிறுத்தத்தை அறிவித்தார். மேலும் முழுத்தோட்டத்துறையையும் முடக்க போவதாக அறிவித்தார். வேலை நிறுத்தம் 21 நாட்கல்நாட்கள் நீடித்தது. அப்போது விவசாயத்துறை அமைச்சராக இருந்த [[டி. எஸ். சேனானயக்காசேனநாயக்கா]] இந்தியஇந்தியப் பிரதிந்திகளுடன்பிரதிநிதிகளுடன் பேச்சுக்களுக்கு இணங்கினார். பேச்சுக்களில் ஏற்பட்ட இணக்கப்படுகளுக்குஇணக்கப்பாடுகளுக்கு ஏற்ப ஆளுனர் மூர் 360 குடும்பங்களையும் மன்னிக்குமாறு பணித்தார். சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கையில் முக்கிய அரசியல் சக்தியாக வளரவளரத் தொடங்கிய போது 1948 [[பெப்ரவரி 4]] இல் இலங்கை சுதந்திரம் பெற்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சௌமியமூர்த்தி_தொண்டமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது