அழகி (2002 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தங்கர் பச்சான் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

17:04, 3 நவம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

அழகி (2002) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.தங்கர் பச்சன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பார்த்திபன்,நந்திதா தாஸ்,தேவயானி போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அழகி
இயக்கம்தங்கர் பச்சன்
இசைஇளையராஜா
நடிப்புபார்த்திபன்
நந்திதா தாஸ்
தேவயானி
வெளியீடு2002
மொழிதமிழ்
ஆக்கச்செலவுஇந்திய ரூபா. 2.5 கோடி

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சண்முகமும் (பார்த்திபன்) தனலட்சுமி (நந்திதா தாஸ்) இருவரும் சிறுவயதில் கிராமச் சூழலில் படித்த மாணவர்கள் தனலக்ஸ்மியை பலமுறை ஆசிரியர்களிடமிருந்து காப்பாற்றும் சண்முகம் அவர் மீது காதல்கொண்டிருந்தார், தனலக்ஸ்மியும் அவர் மீது காதல் கொண்டிருந்தார் ஆனால் குடும்பச் சூழல்கள் காரணமாக இருவரும் பிரிந்து செல்கின்றனர்.தனலட்சுமி ஏழைக் குடியானவனைத் திருமணம் செய்து மிகுந்த இன்னல்களிற்குள் தள்ளப்படுகின்றார். ஆனால் சண்முகமோ வசதி படைத்தவராக வளர்மதி (தேவயானி) என்ற பெண்ணை மணம் செய்து மனநிறைவுடன் வாழ்கின்றார்.திடீரென ஒரு நாள் தனலட்சுமியை ஏழ்மை நிலையில் பார்த்துவிட்ட சண்முகம் அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துவந்து வேலை ஒன்றும் பெற்றுத் தருகின்றார்.இதன் பின்னர் சண்முகம் குடும்பத்தில் ஏற்படும் மாறுதல்கள் திரைக்கதையின் முடிவாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகி_(2002_திரைப்படம்)&oldid=79396" இலிருந்து மீள்விக்கப்பட்டது