பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 21:
 
=== இந்தியாவில் காலூன்றியமை ===
இந்துப் பெருங்கடல் பகுதியில் நிறுவனம் வணிகர்களுக்கும், போத்துக்கீச, ஒல்லாந்த வணிகர்களுக்கும் இடையே பகைமை நிலவி வந்தது. 1612 ல், [[சுவாலிப் போர்|சுவாலிப் போரில்]], நிறுவனம் போத்துக்கீசரைத் தோற்கடித்த நிகழ்வு, முகலாயப் பேரரசரான [[பேரரசன் ஜஹாங்கீர்|ஜஹாங்கீரிடம்]], நிறுவனத்துக்கு சாதகமான போக்கு ஏற்பட வழி வகுத்தது. தொலைதூரக் கடல்களில் இடம்பெற்ற வணிகம் தொடர்பான போர்களின் பயனற்ற தன்மையை உணர்ந்த இந்நிறுவனம், பிரித்தானியா, [[இந்தியா]] ஆகிய இரு நாடுகளினதும் அதிகாரபூர்வமான அனுமதியுடன், இந்தியாவில் காலூன்றுவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய முற்பட்டது. இது குறித்து [[முகலாயர்|முகலாய]] அரசுக்கு ராஜதந்திர அடிப்படையிலான தூது அனுப்பும்படி பிரித்தானிய அரசைக் நிறுவனம் கேட்டுக்கொண்டது. 1615 ஆம் ஆண்டு, பிரித்தானிய அரசனான முதலாம் ஜேம்ஸ், அக்காலத்தில், இந்தியாவின் பெரும் பகுதியையும், ஆப்கனிஸ்தானையும் சேர்த்து ஆண்டுவந்த முகலாயப் பேரரசனாகிய ஜஹாங்கீரிடம், [[சர் தோமஸ் ரோ]] (''Sir Thomas Roe'') என்பவரைத் தூது அனுப்பியது. சூரத்திலும், ஏனைய பகுதிகளிலும், கம்பனியைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்து, நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, வணிக ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்வதே இத் தூதின் நோக்கமாகும். இதற்குப் பதிலாக ஐரோப்பியச் சந்தைகளிலிருந்து பண்டங்களையும், அருமையாகக் கிடைக்கக்கூடிய வேறு பொருட்களையும், மன்னருக்கு வழங்குவதாகக் நிறுவனம் ஒத்துக்கொண்டது. இந்தத் தூது வெற்றிகரமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய வணிகர்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அவர்கள் விரும்பிய, வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்துப் பிரித்தானிய மன்னருக்கு, ஜஹாங்கீர் கடிதம் எழுதினார்.
 
=== விரிவாக்கம் ===