மரைனர் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: ro:Programul Mariner
No edit summary
வரிசை 7:
 
==மரைனர் திட்டக் கலங்கள்==
* [[மரைனர் 1]] - [[வெள்ளி (கோள்)|வீனஸ்]] கோளை நோக்கி [[ஜூலை 22]], [[1962]] இல் இது அனுப்பப்பட்டது. ஆனால் ஏவப்பட்ட 5 நிமிடங்கக்ளுக்குள் வெடித்துச் சிதறியது.
* [[மரைனர் 2]] - இது [[ஆகஸ்ட் 27]], [[1962]] இல் வீனசை நோக்கி 3-மாதத் திட்டத்தில் ஏவப்பட்டது. இது வெற்றிகரமான பயணமாக அமைந்தது. இதுவே வேறொரு கோளை நோக்கிச் சென்ற முதலாவது விண்கலமாகும்.
* [[மரைனர் 3]] - இது செவ்வாய்க் கோளை நோக்கிச் செலுத்தப்பட்டது. ஆனால் இது தொலைந்து விட்டது.
* [[மரைனர் 4]] - இது செவ்வாய்க் கோளை நோக்கி [[நவம்பர் 28]], [[1964]] இல் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. செவ்வாய்க்குக் கிட்டவாக சென்ற முதல் விண்கலமாகும். ஆனாலும் பின்னர் தொடர்புகள் கிடைக்கவில்லை.
* [[மரைனர் 5]] - [[ஜூன் 14]], [[1967]] இல் வீனஸ் நோக்கி ஏவப்பட்டது. [[அக்டோபர்|அக்டோபரில்]] கோளின் பார்வைக்கெட்டிய தூரம் வரை சென்றது. வீனசின் சுற்றுச்சூழலை அறிவதற்காக வானொலி அலைகள் மூலம் பல பரிசோதனைக் கருவிகளை எடுத்துச் சென்றது. இதன் தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.
* [[மரைனர் 6]], [[மரைனர் 7|7]] - இவை செவ்வாய்க்கு முறையே [[பெப்ரவரி 24]], [[1969]] இலும் [[மார்ச் 27]], [[1969]] இலும் ஏவப்பட்டன. செவ்வாயின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளை நோக்கிச் செலுத்தப்பட்டன. இவையும் தொடர்புகள் அற்றுப்போயின.
* [[மரைனர் 9]], [[மரைனர் 8|8]] - செவ்வாய்க் கோளின் மேற்பரப்பைப் படம் பிடிக்கவென அனுப்பப்பட்டவை. மரைனர் 8 ஏவப்படுகையில் அழிந்தது. மரைனர் 9 [[மே]] [[1971]] இல் ஏவப்பட்டது. இது செவ்வாயின் முதலாவது செயற்கைச் [[செய்மதி]] ஆனது. செவ்வாயின் சுற்றுவட்டத்துக்கு [[நவம்பர்]] 1971 இல் சென்று அதன் மேற்பரப்பின் படங்களைப் பிடித்தது. இது தற்போது இயங்கவில்லை. ஆனாலும் இது [[2022]] வரை செவ்வாயின் சுற்றுவட்டத்தில் சுற்றி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* [[மரைனர் 10]] - [[நவம்பர் 3]], [[1973]] இல் வீனசை நோக்கிச் செலுத்தப்பட்டது. அதற்குப் பின்னர் அது அதிலிருந்து விலகி மேர்க்குரி நோக்கிச் சென்றது. இரண்டு கோள்களின் பார்வைக்குச் சென்ற முதலாவது கலம் இதுவாகும்.
 
 
[[Categoryபகுப்பு:விண்வெளிப் பயணம்]]
{{stub}}
[[Category:விண்வெளிப் பயணம்]]
 
[[bg:Маринър]]
"https://ta.wikipedia.org/wiki/மரைனர்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது